For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கல்யாண மாப்பிள்ளை புவனேஷ்குமாருக்கு பதிலாக தமிழகத்தின் விஜய் சங்கருக்கு வாய்ப்பு

By Staff

டெல்லி: இலங்கை அணிக்கு எதிராக நாக்பூரில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சொந்தக் காரணங்களுக்காக புவனேஷ்வர் குமார், ஷிகார் தவான் இந்தப் போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே கோல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் இரண்டாவது ஆட்டம், நாக்பூரில், வரும், 24ம் தேதி துவங்குகிறது.

Vijay Shankar picked for second test


சொந்தக் காரணங்களுக்காக, அடுத்த இரண்டு டெஸ்ட்களில் விளையாட முடியவில்லை என்று வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கூறியுள்ளார். அதேபோல் ஓப்பனர் ஷிகார் தவான், இரண்டாவது டெஸ்டில் விளையாடவில்லை என்று கூறியுள்ளார்.

புவனேஷ்வர் குமார், நுபுர் நாகர் திருமணம் வரும், 23ம் தேதி மீரட்டில் நடக்க உள்ளது. கோல்கத்தா டெஸ்டில், 8 விக்கெட்கள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைப் பெற்ற புவனேஷ்வர், திருமணத்துக்காக அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட முடியாது என்று கூறியுள்ளார்.

அதையடுத்து தமிழகத்தின் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 26 வயதாகும் சங்கர், தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய ஏ அணிக்காக விளையாடினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், 72 ரன்கள் எடுத்து, முத்தரப்பு போட்டியை இந்தியா வெல்வதற்கு உதவினார். அதைத்தவிர, நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடினார்.

தற்போது நடந்து வரும் ரஞ்சிப் போட்டியில் ஒடிசாவுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்தார். மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

முதல் டெஸ்டில் விளையாடும் 11 பேர்களில் வாய்ப்பு கிடைக்காததால், ரஞ்சிக் கோப்பைக்கு சென்ற இஷாந்த் சர்மா, இரண்டாவது போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது. அதேபோல், துவக்க ஆட்டக்காரராக களமிறங்க முரளி விஜய்க்கு அதிக வாய்ப்புள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:

விராட் கோஹ்லி (கேப்டன்), கே.எல். ராகுல், முரளி விஜய், சத்தேஸ்வர் புஜாரா, அஜிங்யா ரஹானே, ரோஹித் சர்மா, விருத்தமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, விஜய் சங்கர்.
Story first published: Tuesday, November 21, 2017, 18:07 [IST]
Other articles published on Nov 21, 2017
English summary
Tamil Nadu all rounder Vijay Shankar to replace Bhuvaneshwar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X