For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“எதே ஒருமுறை கூட இப்படி நடக்கலையா”.. இந்திய அணியின் தோல்வி.. ட்விட்டரில் வெடித்த புதிய பிரச்சினை!

மும்பை: ஆஸ்திரேலியாவுடனான தோல்விக்கு பிறகு கேப்டன்சி குறித்த சர்ச்சை மீண்டும் இந்திய கிரிக்கெட்டில் எழுந்துள்ளது.

மொஹாலியில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.

208 ரன்களை குவித்த போதும், அதனை கட்டுப்படுத்த முடியாமல் இந்தியா திணறியது தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ரோகித்தின் அந்த ஒரு தவறு.. பவுலிங் மீது குற்றம் சொல்லி என்ன பயன்.. ஆஸ்திரேலியா கை ஓங்கியது எப்படி?? ரோகித்தின் அந்த ஒரு தவறு.. பவுலிங் மீது குற்றம் சொல்லி என்ன பயன்.. ஆஸ்திரேலியா கை ஓங்கியது எப்படி??

இந்திய அணி சொதப்பல்

இந்திய அணி சொதப்பல்

மிகவும் வெற்றிகரமான கேப்டன் என பெயரெடுத்த ரோகித் சர்மா தலைமை சமீப காலமாக சொதப்பி வருகிறது. கடந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் தொடர்ச்சியாக தோல்வி பெற்று வெளியேறியது. தற்போது 208 என்ற இமாலய இலக்கை கூட கட்டுப்படுத்த முடியாமல் கோட்டையை விட்டனர்.

காரணம் என்ன

காரணம் என்ன

இதற்கெல்லாம் காராணமாக ரோகித் சர்மாவின் புதுவித முயற்சிகளும் காரணமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் புது புது பரிசோதனை செய்து பார்க்கிறார். நேற்றுக்கூட தேவையின்றி தினேஷ் கார்த்திக்-ஐ ஸ்டம்பிற்கு அருகில் நிற்கவைத்து, புவனேஷ்வர் குமாரின் இயல்பான பவுலிங்கை வெளிப்படுத்தவிடவில்லை. இதனை மாற்றிக்கொள்ள முடியாது என்றும் அவரே கூறுகிறார்.

கோலியின் கேப்டன்சி

கோலியின் கேப்டன்சி

xஇந்நிலையில் அவரின் கவனமும் கோலியின் பக்கம் திரும்பியுள்ளது. விராட் கோலியின் தலைமையில் இதுவரை ஒருமுறை கூட 200 ரன்களை அடித்து இந்தியா தோற்றதே கிடையாது. குறிப்பாக 180 + ரன்கள் அடித்துவிட்டாலே, இந்தியா கடுமையாக சண்டையிடும். ஆனால் அந்த போராட்ட எண்ணம் கூட நேற்று இந்திய வீரர்களிடம் தெரியவில்லை.

வாக்குவாதம்

வாக்குவாதம்

இதனால் ரோகித் சர்மாவின் கேப்டன்சி மிக மோசமாக இருப்பதாகவும், பரிசோதனை என்ற பெயரில் இந்திய அணியை மோசமான நிலைக்கு கொண்டு செல்வதாகவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து கோலி - ரோகித் ஆகியோ செய்யும் விவாதங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Story first published: Wednesday, September 21, 2022, 13:47 [IST]
Other articles published on Sep 21, 2022
English summary
Virat kohli and Rohit sharma fans Starts fight in Social media after Team India lose 1st T20 match against Australia
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X