For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வரிசையில் சச்சின், டிராவிட், லக்ஷ்மன் சாதனைகள்.. ஆஸி. தொடரில் ஊதித் தள்ள காத்திருக்கும் கோலி

அடிலெய்டு : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி அடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளார்.

அவரை எப்படி சமாளிக்கலாம் என ஆஸ்திரேலிய வீரர்களும், முன்னாள் வீரர்களும் பேசிக் கொண்டு இருக்கும் நிலையில், கோலி புதிய சாதனைகளை எதிர்நோக்கி இருக்கிறார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து தொடர் போல கோலி ரன் குவித்தால், எந்தெந்த சாதனைகளை எட்டுவார் என பார்க்கலாம்.

1,000 ரன்கள் மைல்கல்

1,000 ரன்கள் மைல்கல்

கோலி தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் எட்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடி இதுவரை 992 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 8 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் 1,000 டெஸ்ட் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார்.

இந்திய வீரர்கள் மூவர்

இந்திய வீரர்கள் மூவர்

இந்திய அளவில் இதுவரை 1,000 ரன்களுக்கு மேல் அடித்துள்ள வீரர்கள் சச்சின், லக்ஷ்மன் மற்றும் டிராவிட் மட்டுமே. சச்சின் டெண்டுல்கர் 1809 ரன்கள், விவிஎஸ் லக்ஷ்மன் 1236 ரன்கள் மற்றும் டிராவிட் 1143 ரன்கள் எடுத்துள்ளனர்.

சதங்கள் எத்தனை?

சதங்கள் எத்தனை?

இது தவிர ஆஸ்திரேலியாவில் அதிக டெஸ்ட் சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் முதல் இடத்தில் 6 சதங்களுடன் இருக்கிறார். அடுத்த இடத்தில் கவாஸ்கர் மற்றும் கோலி உள்ளனர். இவர்கள் இருவரும் 5 சதங்கள் அடித்துள்ளனர்.

அதிக சதம் அடித்த சாதனை

அதிக சதம் அடித்த சாதனை

கோலி இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு சதங்கள் அடித்தால் சச்சினின் சாதனையை முறியடிப்பார். ஒரு சதம் மட்டும் அடித்தால் கவாஸ்கரை முறியடிப்பார். கோலி தற்போது சிறந்த பார்மில் இருப்பதால் நிச்சயம் கவாஸ்கர் மற்றும் சச்சினின் சாதனையை முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆஸ்திரேலியாவில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் டிராவிட், லக்ஷ்மனை முந்திச் செல்லவும் வாய்ப்புள்ளது.

Story first published: Tuesday, December 4, 2018, 17:47 [IST]
Other articles published on Dec 4, 2018
English summary
Virat Kohli could achieve 1000 runs milestone and break century record of former Indian cricketers.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X