For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மாமிசம் சாப்பிட்டால் தான் உடல் வலு பெறுமா? இன்ஸ்டாவில் ரசிகர் கேட்ட கேள்வி.. விராட் கோலி சொன்ன பதில்

மும்பை : டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு விராட் கோலிக்கு நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து விராட் கோலி வட இந்தியாவில் தனியாக சுற்றுலா சென்று தனது பொழுதை கழித்தார்.

இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விராட் கோலி இந்திய அணிக்காக விளையாடுகிறார்.

அதிக கவனம்

அதிக கவனம்

இதற்காக மும்பை திரும்பி உள்ள விராட் கோலி தன்னுடைய பயிற்சியை தொடங்கிவிட்டார் .வரும் நான்காம் தேதி வங்கதேசத்துக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதில் விராட் கோலி உடற்பயிற்சிக்கு அதிக கவனம் செலுத்துவார் என்று நம் அனைவருக்குமே தெரியும்.

அசைவம்

அசைவம்

விராட் கோலி ஒரு காலத்தில் மாமிசம் சாப்பிடும் நபராக இருந்தார். ஆட்டுக்கால், கோழி ,மீன் போன்ற உணவுகளில் அதிக கவனம் செலுத்தி வந்தவர். இதனை அடுத்து நெட்பிளக்சில் வெளியான ஒரு தொடரை பார்த்து விட்டு விராட் கோலி சைவத்துக்கு மாறினார் .அதனைத் தொடர்ந்து அசைவத்தை விராட் கோலி சேர்த்துக் கொண்டதே கிடையாதும்.

பெரிய கட்டுக்கதை

பெரிய கட்டுக்கதை

இந்த நிலையில், விராட் கோலி உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதில் ரசிகர் ஒருவர் மாமிசம் சாப்பிட்டால் தான் இந்த மாதிரி உடல் வலு கிடைக்கும் என்று முன்பு சொன்னார்கள் என்று பதிவிட்டிருந்தார். இதற்கு ஹா ஹா ஹா ஹா என்று பதில் அளித்த விராட் கோலி உலகத்திலே சொல்லப்பட்ட பெரிய கட்டுக்கதை என்று குறிப்பிட்டிருந்தார்.

பட்டிமன்றம்

பட்டிமன்றம்

விராட் கோலியின் இந்த பதில் மீண்டும் சமூக வலைத்தளத்தில் பட்டிமன்றத்தை தொடங்கிவிட்டது. மாமிசம் சாப்பிட்டால் தான் உடல் வலுப்பெற முடியும் என்று அதற்கு கீழ் ரசிகர்கள் பதிவிட அது பொய் என்று இன்னொரு தரப்பு பதில் கூற தொடங்கி இருக்கின்றனர்.

Story first published: Thursday, November 24, 2022, 23:52 [IST]
Other articles published on Nov 24, 2022
English summary
Virat kohli reply to fans on non vegeterian created fuss in social network மாமிசம் சாப்பிட்டால் தான் உடல் வலு பெறுமா? இன்ஸ்டாவில் ரசிகர் கேட்ட கேள்வி.. விராட் கோலி சொன்ன பதில்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X