For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரன் அடிக்கல.. என்னத்த சொல்றது... அவங்களத்தான் கேக்கணும்..!! தோனி, கேதர் மீது பாயும் கோலி

எட்ஜ்பாஸ்டன்: தோனியும், கேதர் ஜாதவும் ஏன் பெரிய ஷாட்டுகளை அடிக்க வில்லை என்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்று கேப்டன் கோலி கூறியிருக்கிறார்.

உலகமே எதிர்பார்த்த முக்கிய போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இங்கிலாந்து, இந்திய அணிகள் மோதின. 27 ஆண்டுகாலமாக உலக கோப்பையில் இந்தியாவிடம் உதை வாங்கிக் கொண்டிருந்த இங்கிலாந்திடம் இந்தியா தோற்றிருக்கிறது.

338 என்கிற இங்கிலாந்து அணியின் இமாலய டார்கெட்டை தொட முடியாமல் இந்தியா 306 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இந்திய அணியின் தோல்வியால் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இங்கிலாந்து வலுவாக பெற்றிருக்கிறது.

உலக கோப்பையில் தோல்வி

உலக கோப்பையில் தோல்வி

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்தியாவின் முதல் தோல்வி இது. அதற்கு காரணங்கள் பல கற்பிக்கப்பட்டாலும், தோனி மற்றும் கேதர் ஜாதவின் பார்ட்னர்ஷிப் மீதான விமர்சனம் இன்னும் முடிந்தபாடில்லை. அது மீண்டும் வலுப்பெற்று எழுந்துள்ளது.

விமர்சனங்கள் தொடருகிறது

விமர்சனங்கள் தொடருகிறது

ஆப்கானின்ஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளைத் தொடர்ந்து தற்போது மீண்டும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் தோனி, கேதர் ஜாதவ் கூட்டணி ஒன்று, இரண்டு என ரன்களை பொ.......றுமையாக எடுத்து, அணியின் தோல்விக்கு காரணமாகியுள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

கோலி அதிருப்தி

கோலி அதிருப்தி

அதனை மறைமுகமாகவே சுட்டிக்காட்டியிருக்கிறார் கேப்டன் கோலி. தோல்விக்கு பின்னர் அவர் அளித்த பேட்டியில், இந்த பார்ட்னர்ஷிப்பினால் ஏற்பட்ட அதிருப்தியை வார்த்தைகளால் வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் கூறியதாவது:

இங். தீவிரம்

இங். தீவிரம்

பொதுவாக எந்த அணியும் தோல்வியை விரும்ப மாட்டார்கள். ஆனால் ஒவ்வொரு அணியுமே 2,3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளன. வெற்றி பெற வேண்டும் என்று வகுத்து வைத்திருந்த திட்டங்களில் இங்கிலாந்து அணியினர் தீவிரமாக இருந்தனர்.

பவுலிங் பெய்லியர்

பவுலிங் பெய்லியர்

போட்டி என்று வந்துவிட்டால் வெற்றி தோல்வி இருக்க தான் செய்யும். தோல்வி ஏற்படும் பொழுது எதிரணியின் பலத்தையும், அவர்களின் சிறப்பான செயல்பாடுகளையும் ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டும். பந்துவீச்சில் அதிக ரன்களை வாரி வழங்கிவிட்டோம். விக்கெட்டுகளை விரைவாக விழந்ததும் தோல்விக்கு முக்கியமான காரணம்.

தோல்விக்கான காரணம்

தோல்விக்கான காரணம்

ஆக, தோல்வியை தள்ளிவைத்துவிட்டு, இதுபோன்ற பிளாட்டான பிட்சுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தோனி, கேதர் ஜாதவின் இறுதி ஓவர் ஆட்டம் பற்றி அவர்களிடம் பேச வேண்டும். கடினமான ஷாட்களை எதிர்கொள்ள முயன்றார் தோனி, ஆனால் இங்கிலாந்து வீரர்களின் சிறப்பான பந்துவீச்சுகளால், அது முடியாமல் போனது.

இங்கிலாந்து தகுதி

இங்கிலாந்து தகுதி

எதிர்வரக் கூடிய ஆட்டங்களில், அணியின் செயல்பாடுகளை மாற்றி கொள்ள வேண்டும். ஆடுகளும் எங்களுக்கு சாதகமானதாக இல்லை. முடிந்த வரை போராடினோ, சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். இருந்தாலும் எங்களை விட இங்கிலாந்து அணியே இந்த வெற்றிக்கு தகுதியானது என்றார்.

Story first published: Monday, July 1, 2019, 11:24 [IST]
Other articles published on Jul 1, 2019
English summary
We have to ask dhoni and kedar, for slow scoring rates says skipper virat kohli.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X