For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எல்லாமே போச்சு... அவரால தான் தோற்றோம்... புலம்பி தள்ளும் ரகானே

Recommended Video

IPL 2019: Hyderabad vs Rajasthan | 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஹைதராபாத்-வீடியோ

ஹைதராபாத்:150க்கும் அதிகமான ரன்கள் எடுத்தாலே போதும் என்று தான் நினைத்தோம். ஆனால் எதிரணியில் வார்னர் போன்ற பேட்ஸ்மேன்கள் இருப்பதால் கணிப்புகள் தவறாகி விடுகின்றன என்று ராஜஸ்தான் கேப்டன் ரகானே கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி மற்றும் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான 8-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி ராஜஸ்தான் சார்பில் கேப்டன் ரகானேவும், ஜோஸ் பட்லரும் துவக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். பட்லர் 5 ரன்னில் வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் ரகானேவுடன் இணைந்து நிதானமாக ஆடினார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று மோதல் கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று மோதல்

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. அதில் ரகானே அரை சதம் கடந்த நிலையில் 70 ரன்களில் வெளியேறினார். முடிவில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை எடுத்தது.

இலக்கை நோக்கி பயணம்

இலக்கை நோக்கி பயணம்

பின்னர் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் சார்பில் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் துவக்கம் முதலே ரன் ரேட் வேகமாக உயர்ந்தது.

வார்னர் காட்டடி

வார்னர் காட்டடி

அதில் அரை சதம் அடித்து அசத்திய வார்னர் 69 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். தொடர்ந்து அதிரடி காட்டி வந்த பேர்ஸ்டோவ் 45 ரன்களில் கேட்ச் மூலம் வெளியேற்றப்பட்டார். அடுத்ததாக கேப்டன் கேன் வில்லியம்சன், விஜய் சங்கர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.

ஹைதராபாத் வெற்றி

ஹைதராபாத் வெற்றி

முடிவில் ஹைதராபாத் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

காரணம் இதுதான்

காரணம் இதுதான்

அதிக ரன்கள் அடித்தும் தோல்வியை சந்தித்திருப்பதால் மும்பை அணி வீரர்கள் சோர்ந்து போயுள்ளனர். இந்நிலையில் தோல்வி குறித்து ராஜஸ்தான் கேப்டன் ரகானே கூறியதாவது:

 போதுமென நினைத்தோம்

போதுமென நினைத்தோம்

190க்கும் அதிகமான ரன்கள் இலக்கு என்பது இந்த மைதானத்தில் மிக அதிகமானது. நாங்கள் முதலில் 150க்கும் அதிகமான ரன்களே போதும் என்று தான் நினைத்தோம்.

கணிப்புகள் வீணானது

கணிப்புகள் வீணானது

ஆனால் எதிரணியில் வார்னர் போன்ற பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். அந்த சூழ்நிலையில் கணக்குகளும், கணிப்புகளும் வீணாகிவிடுகிறது. ஹைதராபாத் வீரர்கள் மிக அற்புதமாக விளையாடினர். சஞ்சு சாம்சன் திறமையான வீரர், கிரிக்கெட்டில் அவர் இன்னும் நிறைய சாதிப்பார் என்றார்.

Story first published: Saturday, March 30, 2019, 11:08 [IST]
Other articles published on Mar 30, 2019
English summary
We lost because of David warner batting says Rajasthan captain rahane.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X