For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கவாஸ்கர் சொன்னா உடனே செஞ்சிடுவோமா..? அதெல்லாம் முடியாது..! தில் காட்டிய தேர்வுக்குழு தலைவர்

Recommended Video

Gavaskar Slams Team Selectors | இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவை திட்டிய கவாஸ்கர்

மும்பை: முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியது எல்லாம் எங்களிடம் நடக்காது என்று தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியிருக்கிறார்.

இந்திய அணியின் கேப்டனாக கோலியை மீண்டும் நியமித்ததற்கு எதிராக சுனில் கவாஸ்கர் காட்டமான கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். இப்போது இருக்கும் தேர்வுக்குழு நொண்டி வாத்து போன்று செயல்படுவதாக கூறியிருந்தார்.

எப்படி அவர்கள் விராட் கோலியை மீண்டும் கேப்டனாக தேர்வு செய்தார்கள் ? என்று புரிய வில்லை. உலக கோப்பை தொடரில் சரியாக விளையாடாத ஜாதவ் மற்றும் கார்த்திக் ஆகியோர் அணியில் இருந்து நீக்கிவிட்டனர்.

கண்மூடித்தனமானது

கண்மூடித்தனமானது

அதைப்போலவே சரியாக செயல்படாத கேப்டன் கோலியின் கேப்டன் ஷிப்பை அவர்கள் பறித்திருக்க வேண்டும். ஆனால் மீண்டும் கேப்டன் பதவியை ஆலோசிக்காமல் கோலிக்கு கண்மூடித்தனமாக வழங்கியுள்ளனர். இது தேர்வுக் குழு விருப்பமா அல்லது கோலியின் தனிப்பட்ட விருப்பமா ? என்று கேள்வி எனக்கும் எழுகிறது.

புதிய தேர்வுக்குழு

புதிய தேர்வுக்குழு

தேர்வுக்குழுவின் கடைசி அணி தெரிவு இதுவாக இருக்கும். ஏனென்றால் விரைவில் இந்திய அணிக்கு புதிய தேர்வுக் குழு அமைக்கப்பட வேண்டும். இனிமேல் அமைக்கும் குழுவானது அணிக்கு ஏற்றவாறு வீரர்களை தேர்வு செய்து விளையாட வைக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

கருத்து புறக்கணிப்பு

கருத்து புறக்கணிப்பு

அவரது கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கவாஸ்கர் கருத்தை ஏற்கமுடியாது, மரியாதையுடன் அவரது கருத்தை புறக்கணிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் இந்திய அணி தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் கூறியதாவது: பார்வையாளர்கள்.

தேவை இல்லை

தேவை இல்லை

அணி தேர்வுக் குழுவில் உள்ள அனைத்து தேர்வாளர்களுமே அனைத்து தரப்பு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி உள்ளனர். சர்வதேச போட்டிகளை தவிர்த்து நாங்கள் 477 விளையாடி உள்ளோம். இதைவிட பெரிய அனுபவம் வேறு தேவை இல்லை.

7 டெஸ்ட் போட்டி

7 டெஸ்ட் போட்டி

இங்கிலாந்து அணி சேர்மன் ஸ்மித் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார். அதேபோல ஆஸ்திரேலிய தலைமை தேர்வாளர் ஹோன்ஸ் ஏழு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே பங்கேற்றவர். ஆனால் 128 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 224 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய மார்க் வாக் அவருக்கு கீழ் தான் பணிபுரிகிறார்.

ஒன்றும் நடக்காது

ஒன்றும் நடக்காது

எனவே நான் கவாஸ்கரின் உணர்வை மதிக்கிறோம். அவரது கருத்துகளை வரவேற்கிறோம். அதே சமயம் புண்படுத்தும்படி வரும் கருத்துக்கள் எங்கள் குழுவை பலப்படுத்துமே தவிர வேறு ஒன்றும் நடக்காது. இதன் மூலம் எங்களின் ஒற்றுமை தான் அதிகரிக்கும் என்று கூறினார்.

Story first published: Wednesday, July 31, 2019, 14:44 [IST]
Other articles published on Jul 31, 2019
English summary
We respect former captain gavaskar opinion says chief selector MSK Prasad.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X