For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்லில் கலக்கும் விக்கெட் கீப்பர்கள்... யார் யார் டாப் தெரியுமா!

ஐபிஎல்லின் இந்த சீசனில் அனைத்து அணிகளின் விக்கெட் கீப்பர்களும் அதிரடியாக ரன் குவித்து வருகின்றனர்.

Recommended Video

ஐபிஎல்லில் கலக்கும் விக்கெட் கீப்பர்கள்... யார் யார் டாப் தெரியுமா!

டெல்லி: இந்த ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடும் அனைத்து அணிகளின் விக்கெட் கீப்பர்களும் ஸ்டம்புக்கு பின்னாலும், முன்னாலும் அசத்தி வருகின்றனர்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது இதுவரை 42 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் பெரும்பாலான அணிகளில் விக்கெட் கீப்பர்கள் பேட்டிங்கிலும் கலக்கி வருகின்றனர்.

wicket keepers shine in the IPL

சீனியரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி, 11 ஆட்டங்களில் 393 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்துள்ளார். 28 சிக்சர்களை அடித்து, அதிக சிக்சர் அடித்தோரில் முதலிடத்தில் உள்ளார். கீப்பிங்கில் 6 கேட்ச்கள், 2 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

ஹைதராபாத் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ரிஷப் பந்த், 11 ஆட்டங்களில் 521 ரன்கள் குவித்துள்ளார். அதிக ரன்கள் குவித்தோரில் முதலிடத்தில் உள்ளார். அதிகபட்சம் 128 ரன்கள் எடுத்துள்ளார். இவர் 27 சிக்சர்களை விளாசியுள்ளார். ஸ்டம்புக்கு பின்னால் 3 கேட்ச், 1 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

பஞ்சாபின் கேஎல் ராகுல், 10 ஆட்டங்களில் 471 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 95 ரன்கள் அடித்துள்ளார். 19 சிக்சர்களை விளாசியுள்ள இவர் 6 கேட்ச், 1 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

ராஜஸ்தானிஸ் ஜோஸ் பட்லர் 11 ஆட்டங்களில் 415 ரன்கள் அடித்துள்ளார். சிஎஸ்கேவுக்கு எதிராக நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 95 ரன்கள் எடுத்ததே அவருடைய அதிகபட்ச ஸ்கோராகும். கீப்பிங்கில் 9 கேட்ச், 1 ஸ்டம்பிங் செய்துள்ளார். குட்டிப் பையனான மும்பையின் இஷான் கிஷண், 11 ஆட்டங்களில் 238 ரன்கள் அடித்துள்ளார். 7 கேட்ச், 2 ஸ்டம்பிங் செய்து அசத்தி வருகிறார்.

தோனிக்கே சீனியரான கொல்கத்தாவின் கேப்டனான தினேஷ் கார்த்திக், 11 ஆட்டங்களில் 321 ரன்கள் அடித்துள்ளார். 6 கேட்ச், 2 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

பெங்களூரின் குவின்டன் டிகாக், 8 ஆட்டங்களில் 201 ரன்கள் எடுத்ததுடன், 7 கேட்ச், 3 ஸ்டம்பிங் செய்துள்ளார். அந்த அணியைச் சேர்ந்த வயசு குறைவாக இருந்தாலும் சீனியரான பார்த்திவ் படேல், 2 ஆட்டங்களில் மட்டுமே விளையாடி, 73 ரன்கள் எடுத்துள்ளார்.

ஹைதராபாத்தின் விருத்தமன் சாகா 10 ஆட்டங்களில் 87 ரன்கள் மட்டும் எடுத்துள்ளார். அதே நேரத்தில் 5 கேட்ச், 1 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

Story first published: Saturday, May 12, 2018, 5:57 [IST]
Other articles published on May 12, 2018
English summary
Wicket keepers performed well with bat also in this ipl.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X