For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WTC Final 2021: இந்திய அணியில் "அவர்" நீக்கமா?.. அடுத்தக்கட்ட மூவ் என்ன? - பவுலிங் கோச் பதில்

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாளில் மழை பெய்திருப்பதால், பிளேயிங் லெவனில் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்விக்கு இந்திய பவுலிங் கோச் பதில் அளித்திருக்கிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பிளேயிங் லெவனை ஒருநாள் முன்னதாகவே பிசிசிஐ அறிவித்துவிட்டது. 6 பேட்ஸ்மேன்கள், 3 ஃபாஸ்ட் பவுலர்கள், 2 ஸ்பின்னர்கள் ஃபார்முலா உபயோகிக்கப்பட்டது.

WTC Final: இன்றாவது மேட்ச் நடக்குமா? வெதர் ரிப்போர்ட்ஸ் சொல்வது என்ன? - ஹேப்பி அப்டேட்WTC Final: இன்றாவது மேட்ச் நடக்குமா? வெதர் ரிப்போர்ட்ஸ் சொல்வது என்ன? - ஹேப்பி அப்டேட்

அதன்படி இந்திய அணி பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா என 3 வேகப்பந்துவீச்சாளர்களும் அஸ்வின் மற்றும் ஜடேஜா என 2 ஸ்பின்னர்களையும் கொண்டு வியூகம் அமைத்தது. இந்த பவுலிங் கூட்டணியைத் தான் அனைவரும் எதிர்பார்த்தனர்.

சுனில் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர்

ஆனால், சவுத்தாம்ப்டனில் நேற்று முழுவதும் மழை பெய்திருப்பதால், மீண்டும் பிளேயிங் லெவனை மாற்ற வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் உட்பட பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அதாவது, மழை பெய்திருப்பதால், பவுலர்களுக்கு ஏற்ற பிட்ச்சாக இது உருமாற அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக ஸ்விங் இருக்கும். இதில், ஸ்பின்னர்களால் பெரியளவில் தாக்கம் ஏற்படுத்த முடியாது என்றே கூறப்படுகிறது.

அஷ்வினுக்கு செக்

அஷ்வினுக்கு செக்

ஸோ, இந்திய அணியில் ஒரு ஸ்பின்னரை உட்கார வைத்து, அதற்கு பதில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்ப்பது அணிக்கு வலு சேர்க்கும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். அதாவது, ஹனுமா விஹாரியை அணியில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்படியெனில், அஷ்வினோ, அல்லது ஜடேஜாவோ அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அப்படி நீக்குவது என்று முடிவு செய்துவிட்டால், அஷ்வின் தான் உட்கார வைக்கப்படுவார் என்று தெரிகிறது.

மாற்றம் தேவையா?

மாற்றம் தேவையா?

இந்த நிலையில், இந்திய அணி பிளேயிங் 11 மாற்றம் குறித்து இந்திய ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் பேட்டி அளித்துள்ளார். அதில், "பல நிலைமைகளை ஆராய்ந்து கணக்கீடு செய்த பிறகே பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த 11 வீரர்களும், எந்த சூழ்நிலையிலும், எந்த வானிலையிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள் என்றே நினைக்கிறேன். இவர்கள் தான் அணி என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஒருவேளை மாற்றம் தேவை என்று நினைத்தால், அதன் பிறகு முடிவு செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.

கடைசி நேரத்தில்

கடைசி நேரத்தில்

ஸோ, ஸ்ரீதரின் கூற்றுப்படி இந்திய அணியில் பெரியளவில் நிச்சயம் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது. இரண்டாம் நாளான இன்று, காலையில் மழை இருக்காது என்றும், சூரியன் தலைத் தூக்க வாய்ப்புள்ளதாகவும் இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், மதியத்துக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. அப்படி, போட்டி தொடங்கும் நேரத்தில் வெயில் அடித்தது என்றால், அணியில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. எனினும், கடைசி நேரத்தில் எந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்கப்படலாம்.

Story first published: Saturday, June 19, 2021, 12:25 [IST]
Other articles published on Jun 19, 2021
English summary
india's playing xi change ind vs nz wtc final - இந்திய அணி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X