For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“கேப்டன் ரோஹித் சர்மா” எத்தனை தொடரில் வெற்றி பெற்று இருக்கிறார்?

துபாய் : இந்தியா ஆசிய கோப்பை தொடரில் இன்று ஹாங்காங் மற்றும் நாளை பாகிஸ்தானோடு மோத உள்ளது.

விராட் கோலி ஓய்வில் இருக்கும் நிலையில், ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா இதுவரை மூன்று தொடர்களில் கேப்டன் பதவியில் இருந்து வென்று கொடுத்து இருக்கிறார். தற்போது, ஆசிய கோப்பை தொடரை வென்று நான்காவது தொடர் வெற்றியை பெறுவாரா? என்ற ஆவல் உருவாகி உள்ளது.

ரோஹித் கேப்டனாக முதல் தொடர்

ரோஹித் கேப்டனாக முதல் தொடர்

2017இல் இலங்கைக்கு இந்தியா சுற்றுபயணம் மேற்கொண்ட போது, விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரோஹித் சர்மா தலைமையில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இந்தியா பங்கேற்றது. கேப்டனாக தன் முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்தார் ரோஹித். முதல் போட்டியில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. எனினும், அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளை வென்று தொடரை 2-1 என கைப்பற்றியது இந்தியா. இதில் இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா 208 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

ரோஹித்தின் 2வது தொடர்

ரோஹித்தின் 2வது தொடர்

இலங்கையோடு ஒருநாள் தொடர் முடிந்தவுடன் மூன்று டி20 போட்டிகளில் இந்தியா ஆடியது. அதற்கும் ரோஹித் சர்மா தான் தலைமை ஏற்றார். அதில் மூன்று போட்டிகளிலும் இந்தியா வென்றது. தொடரை 3-0 என கைப்பற்றியது. இதில் மூன்று போட்டிகளிலும் இந்தியா எளிதாக வென்றது குறிப்பிடத்தக்கது.

ரோஹித்தின் 3வது தொடர்

ரோஹித்தின் 3வது தொடர்

2018இல் இலங்கையில் நடந்த நிதாஸ் ட்ராபி டி20 தொடரில் வங்கதேசம், இலங்கை, இந்தியா மோதின. அதற்கும் ரோஹித் தலைமை ஏற்றார். இதில் ஒரு போட்டியில் மட்டும் இலங்கை இந்தியாவை வீழ்த்தியது. மற்ற போட்டிகள் அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பையில் ரோஹித்

ஆசிய கோப்பையில் ரோஹித்

ரோஹித் சர்மா நான்காவது தொடராக ஆசிய கோப்பையில் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். ஒரு பேட்ஸ்மேனாக வலுவான ரோஹித் சர்மா, ஒரு கேப்டனாகவும் வலுவாக இருந்து, சரியான நேரத்தில், சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்தியா அடுத்து 2௦19 உலகக்கோப்பை தொடரை குறி வைத்து தயாராகி வரும் நிலையில், இந்திய அணியில் கோலிக்கு அடுத்து தலைமை ஏற்க ஒரு நபர் உருவாகி வருவது அணியில் சமநிலையை எட்ட வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Tuesday, September 18, 2018, 13:28 [IST]
Other articles published on Sep 18, 2018
English summary
Will Rohit be victorious as a Captain in Asia cup 2018, which is his fourth series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X