For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலி - தோனி சேர்ந்தா.. கண்டிப்பா அது நடக்கும்.. முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் உறுதி!

மும்பை : 2019 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி - தோனி கூட்டணி எப்படி செயல்படுவார்கள் என்பது குறித்து முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தன் கருத்தை கூறியுள்ளார்.

கோலியின் குணம் மற்றும் தோனியின் குணம் இரண்டுமே அணிக்கு உதவும் எனக் கூறி இந்தியா அதனால் நிச்சயம் உலகக்கோப்பை வெல்லும் என்றார் ஸ்ரீகாந்த்.

RR vs DC: டாஸ் வென்ற டெல்லி... பேட் செய்த ராஜஸ்தான்.. சாம்சன் டக் அவுட்.. ஆனாலும் வெளுக்கும் ரகானே RR vs DC: டாஸ் வென்ற டெல்லி... பேட் செய்த ராஜஸ்தான்.. சாம்சன் டக் அவுட்.. ஆனாலும் வெளுக்கும் ரகானே

கோலி - தோனி

கோலி - தோனி

"விராட் கோலி உதாரணமாக நடந்து காட்டும் சிறந்த தலைவர் (கேப்டன்). அவரை பற்றிய நல்ல விஷயம், அவர் பொறுப்பை தானே எடுத்துக் கொள்கிறார். கூலாக இருக்கும் தோனியுடன் இணைந்து கோலி அதை (உலகக்கோப்பை வெற்றி) மீண்டும் செய்து காட்டுவார்" என்றார் ஸ்ரீகாந்த்.

தோனி பேட்டிங்

தோனி பேட்டிங்

இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கு தயாராகவே உள்ளது. உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து வீரர்களும் ஐபிஎல் தொடரில் ஆடி வருகின்றனர். குறிப்பாக, கடந்த ஆண்டு சரியாக ஆடவில்லை என்ற விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்த தோனி, பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பி வருகிறார்.

மூத்த வீரர்கள்

மூத்த வீரர்கள்

2011 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற இரண்டு வீரர்கள் மட்டுமே, 2019 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளனர். அவர்கள் கோலி மற்றும் தோனி. அவர்கள் இருவரின் வழிகாட்டுதலில் மற்ற இளம் வீரர்கள் உலகக்கோப்பையில் திறம்பட செயல்படுவார்கள் என்று இந்திய ரசிகர்கள் நம்பி வருகிறார்கள்.

உலகக்கோப்பை வெற்றி

உலகக்கோப்பை வெற்றி

1983 மற்றும் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணி 2019 உலகக்கோப்பை தொடரிலும் நிச்சயம் கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. உலகக்கோப்பை தொடர் வரும் மே மாதம் 30 முதல் துவங்க உள்ளது.

Story first published: Monday, April 22, 2019, 21:16 [IST]
Other articles published on Apr 22, 2019
English summary
World cup 2019 : Virat Kohli - MS Dhoni combo will bring back World Cup says Kris Srikkanth
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X