For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

14 விக்கெட்கள் வீழ்த்தி பாக். வீரர் சாதனை.. சுழலை சமாளிக்க முடியாமல் வீழ்ந்த நியூசிலாந்து

துபாய் : பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யாசிர் ஷா சிறப்பாக பந்து வீசி 14 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இம்ரான் கானுக்கு அடுத்து பாகிஸ்தானில் சிறந்த டெஸ்ட் பந்துவீச்சை பதிவு செய்துள்ளார் யாசிர் ஷா.

ஆமை வேக 418 ரன்கள்

ஆமை வேக 418 ரன்கள்

பாகிஸ்தான் முதல் இன்னிங்க்ஸில் 418 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அசார் அலி 81, ஹாரிஸ் சொஹைல் 147, பாபர் ஆசாம் 127 ரன்கள் அடித்தனர். பாகிஸ்தான் அணி ஆமை வேகத்தில் ரன் குவித்தது. 167 ஓவர்களில் 418 ரன்கள் எடுத்தது. இதன் ரன் ரேட் 2.5 ஆகும். ஹாரிஸ் சொஹைல் 421 பந்துகள் சந்தித்து 147 ரன்கள் அடித்து நியூசிலாந்து பந்துவீச்சை கடும் சோதனைக்கு உள்ளாக்கினார்

நியூசிலாந்து 90 ஆல்-அவுட்

நியூசிலாந்து 90 ஆல்-அவுட்

அடுத்து பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி இருந்தது. எனினும், 90 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து அதிர்ச்சி அளித்தது. யாசிர் ஷா முதல் இன்னிங்க்ஸில் 8 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.

ஃபாலோ-ஆன் பெற்றது

ஃபாலோ-ஆன் பெற்றது

அடுத்து ஃபாலோ-ஆன் வாங்கிய நியூசிலாந்து அணியில் டாம் லாதம் 50, ராஸ் டெய்லர் 82, ஹென்றி நிக்கோல்ஸ் 77 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தனர். எனினும், பாகிஸ்தானை விட ரன்களில் மிகவும் பின்தங்கி இருந்தது நியூசிலாந்து அணி.

எந்த பயனும் இல்லை

எந்த பயனும் இல்லை

நியூசிலாந்து அணி 312 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழக்க, பாகிஸ்தான் ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து முதல் இன்னிங்க்ஸில் மிகவும் மோசமாக 90 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், இரண்டாம் இன்னிங்க்ஸில் ரன் குவித்தும் எந்த பயனும் இல்லாமல் போனது.

யாசிர் ஷா 14 விக்கெட்கள்

யாசிர் ஷா 14 விக்கெட்கள்

யாசிர் ஷா இரண்டாம் இன்னிங்க்ஸில் 6 விக்கெட்கள் வீழ்த்தினார். இதன் மூலம் இந்த டெஸ்டில் 184 ரன்களுக்கு 14 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். பாகிஸ்தானில் இம்ரான் கான் 116 ரன்களுக்கு 14 விக்கெட்கள் எடுத்து இருந்ததே சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாக உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் யாசிர் ஷாவின் பந்துவீச்சு இடம் பெற்றுள்ளது.

Story first published: Wednesday, November 28, 2018, 8:09 [IST]
Other articles published on Nov 28, 2018
English summary
Yasir Shah took 14 wickets in Pakistan’s Innings victory against Newzealand
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X