பிளாஷ்பேக் 2019 : ட்விட்டரை மிரள வைத்த விராட் கோலியின் பதிவு.. காரணம் தல தோனி!

இந்த வருடத்தில் அதிக வைரலான கோலியின் ஒரு ட்வீட்

டெல்லி: 2019ஆம் ஆண்டு அதிக முறை ட்விட்டரில் ரீ-ட்வீட் செய்யப்பட்ட பதிவாக விராட் கோலியின் பதிவு சாதனை செய்துள்ளது.

அதே போல, அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹாஷ்டேக் வரிசையில் 2019 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை (#CWC19) இடம் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு விராட் கோலியின் புகைப்படம் ஒன்று அதிக லைக் பெற்ற பதிவாக அமைந்த நிலையில், இந்த ஆண்டு கோலியின் பதிவு அதிக முறை ரீ-ட்வீட் செய்யப்பட்ட பதிவாக அமைந்துள்ளது.

கோலி.. இவரை இன்னுமா சும்மா வைச்சுருக்கீங்க? வெ.இண்டீஸ்-ஐ காலி பண்ண காத்திருக்கும் மிரட்டல் வீரர்!

2019 ட்விட்டர்

2019 ட்விட்டர்

உலகில் நடக்கும் அத்தனை தகவல்களையும் அடுத்த நொடியில் தெரிந்து கொள்ள உதவும் சமூக வலை தளமான ட்விட்டர், இணையவாசிகளின் மனநிலையை அறிந்து கொள்ள உதவும் முக்கிய சாதனம் ஆகவும் விளங்குகிறது.

ரீ-ட்வீட், லைக், ஹேஷ்டேக்

ரீ-ட்வீட், லைக், ஹேஷ்டேக்

ட்விட்டரில் இருக்கும் பிரபலங்களின் பதிவுகளுக்கு ரசிகர்கள் லைக், ரீ-ட்வீட் மூலம் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், 2019ஆம் ஆண்டு அதிக ரீ-ட்வீட் பெற்ற பதிவு குறித்த தகவலை வெளியிட்டு உள்ளது ட்விட்டர்.

ட்விட்டரை ஆளும் கோலி

ட்விட்டரை ஆளும் கோலி

இந்திய அளவில் ட்விட்டரை ஆளும் பிரபலம் என்றால் அது இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தான். அவரது பதிவுகள் ஒவ்வொன்றும் லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறது.

அந்த பதிவு

அந்த பதிவு

கடந்த ஆண்டு தோனியின் பிறந்தநாள் அன்று, விராட் கோலி அவரை குறித்து வெளியிட்ட பதிவு, ட்விட்டரில் வேகமாக டிரென்டிங் ஆனது. அது தான் 2019ஆம் ஆண்டில் அதிக முறை ரீட்வீட் செய்யப்பட்ட பதிவு ஆகும்.

என்ன கூறி இருந்தார்?

என்ன கூறி இருந்தார்?

அந்த பதிவில், "பிறந்தநாள் வாழ்த்துக்கள் மஹி பாய். மிகச் சிலர் தான் நம்பிக்கை மற்றும் மரியாதையின் அர்த்தத்தை புரிந்து கொள்வார்கள். உங்களிடம் நான் கொண்ட நீண்ட கால நட்பை நினைத்து மகிழ்கிறேன். எங்கள் எல்லோருக்கும் நீங்கள் தான் பெரிய அண்ணன். நான் இதை முன்பும் கூறி இருக்கிறேன். நீங்கள் தான் எப்போதும் என் கேப்டன்" என்று கூறி இருந்தார் கோலி.

அதிக ரீ-ட்வீட்

இந்தப் பதிவு 47,000க்கும் அதிகமான முறை ரீ-ட்வீட் செய்யப்பட்டு இருந்தது. இதுவே கடந்த ஆண்டு வெளியான பதிவுகளில் அதிக முறை ரீ-ட்வீட் செய்யப்பட்ட பதிவு. மேலும், இந்த பதிவுக்கு 414,000 லைக்குகளும் கிடைத்து இருந்தது.

கிரிக்கெட் ஹேஷ்டேக்

கிரிக்கெட் ஹேஷ்டேக்

அதே போல, 2019 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான #cwc19 என்ற ஹேஷ்டேக் அதிகமுறை பயன்படுத்தப்பட்ட டேக்களில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. முதல் பத்து இடங்களில் வேறு எந்த விளையாட்டு தொடர்பான டேக்கும் இடம் பெறவில்லை.

மற்ற டிரென்டிங்

மற்ற டிரென்டிங்

ஹேஷ்டேக்களில் முதல் இடத்தில் லோக்சபா தேர்தல் இடம் பெற்றுள்ளது. தமிழக அளவில் பிகில் திரைப்படம் மட்டுமே ஆறாம் இடம் பிடித்து முதல் பத்து ஹேஷ்டேக்-களுக்குள் இடம் பெற்றுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Year Ender 2019 : Virat Kohli tweet on Dhoni birthday is the most retweeted tweet
Story first published: Wednesday, December 11, 2019, 12:50 [IST]
Other articles published on Dec 11, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X