For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காயமடைந்த அந்த வீரர் இன்றைய மேட்சில் இல்லை..? உறுதியாகிறது இந்தியாவின் வெற்றி வாய்ப்பு

எக்பாஸ்டன்: இந்தியாவுக்கு எதிரான முக்கிய போட்டியில், இங்கிலாந்து வேகப் பந்து வீச்சாளர் ஆர்ச்சர் விளையாடுவது சந்தேகம் என்று தெரிகிறது.

இங்கிலாந்து அரையிறுதிக்கு செல்ல இன்று இந்தியாவுக்கு எதிராக நடக்கும் ஆட்டத்தில் ஜெயிக்க வேண்டும். அதன் பின்னர், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் வெல்வது கட்டாயம். இரண்டில் ஒன்றில் தோற்றாலும்... அதோ கதி தான்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் ஏற்பட்ட தசைப்பிடிப்பால், இங்கிலாந்து தொடக்க வீரர் ஜேசன் ராய் விலகினார். அதனால், இங்கிலாந்து தோல்வி அடைந்தது. அவர் இன்னும் குணமாகாத நிலையில், இன்றைய போட்டியில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.

பயிற்சியில் இல்லை

பயிற்சியில் இல்லை

இது பற்றி மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கும் இங்கிலாந்துக்கு பேரிடியாக ஸ்டார் பவுலர் ஜோப்ரா ஆர்ச்சருக்கும் காலில் தசைப்படிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், 2 நாட்களாக பயிற்சியில் ஈடுபடவில்லை. அவரும் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவாரா என்பது தெரியவில்லை.

விளையாடுவார் என நம்பிக்கை

விளையாடுவார் என நம்பிக்கை

இதுகுறித்து இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறியிருப்பதாவது: ஜேசன் ராயை, இந்தியாவுக்கு எதிரான போட்டியி விளையாட வைக்க முயற்சிக்கிறோம். அவரும் தயாராகி வருகிறார். அவர் உடற்தகுதி பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கிறோம்.

கடைசி நேரம்

கடைசி நேரம்

ஆர்ச்சர் 2 நாட்களாக பயிற்சியில் ஈடுபடவில்லை. அவர் எவ்வாறு களமிறங்குவார் என்பதும் தெரியவில்லை. ஆர்ச்சர் விளையாடுவாரா என்பது கடைசி நேரத்தில் தான் சொல்ல முடியும்.

முக்கிய போட்டிகள்

முக்கிய போட்டிகள்

இந்தியாவுடனான போட்டி ரொம்ப முக்கியமான ஒன்று. நியூசி. ஆட்டத்திலும் வென்று விட்டால் அரையிறுதிக்கு சென்றுவிடுவோம் என்றார். ஆக மொத்தத்தில் ஆதலால், இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் பெரும்பாலும் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை என்று தான் தகவல்கள் வெளி வந்திருக்கின்றன.

Story first published: Sunday, June 30, 2019, 13:14 [IST]
Other articles published on Jun 30, 2019
English summary
Yet to decide about Jofra Archers presence against india match says skipper eoin morgan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X