For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

சுண்டி இழுக்கும் உலகக் கோப்பை கால்பந்து.. 60 வயதில் 3 மணி நேர பயணம்.. வியக்க வைக்கும் ரசிகர்!

மாஸ்கோ உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியை ரசிக்க 3 மணி நேரம் பயணம் செய்து ரஷ்யா வருகிறார் 60 வயது செர்பிய ரசிகர்.

Recommended Video

சுண்டி இழுக்கும் உலகக் கோப்பை கால்பந்து- வீடியோ

மாஸ்கோ: மாஸ்கோவில் தொடங்கி நடந்து வரும் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியை ரசிக்க 3 மணி நேரம் பயணம் செய்து ரஷ்யா வருகிறார் 60 வயது செர்பிய ரசிகர் மிக்கி ஸ்டாஷ்லேவ்..

அறுபது வயதைத் தாண்டிய செர்பியாவைச் சேர்ந்தவர் மிக்கி ஸ்டானிஸ்லாவ். இவர் தீவிர கால்பந்து ரசிகர். தலைநகர் பெல்கிரேடு நகரிலிருந்து 3 மணிநேரம் பயணம் செய்து, மாஸ்கோ சென்று 2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளைக் கண்டு ரசித்து வருகிறார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, மிக்கி ஸ்டானிஸ்லாவ் பிரேசிலில் நடந்த உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளைக் காண ரியோடி ஜெனிரோவுக்கு செல்ல 22 மணி நேர விமானப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால், இப்போது, உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அண்டை நாடான ரஷ்யா நடத்துகிறது.

 முதல் போட்டியின்போது

முதல் போட்டியின்போது

முதல் போட்டி ரஷ்யாவுக்கும், சவூதி அரேபியாவுக்கும் இடையே மாஸ்கோவில் உள்ள லுஷ்னிகி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியைக் காண மிக்கி 3 மணி நேரம் பயணம் செய்து மாஸ்கோ வந்து போட்டியைக் கண்டு ரசித்தார். போட்டிக்கான டிக்கெட்டைப் பெற நீண்ட வரிசையில் காத்திருந்தபோதும் அதுகுறித்து அவர் கவலைப்படவில்லை.

 டிக்கெட் வாங்க பெரும் கூட்டம்

டிக்கெட் வாங்க பெரும் கூட்டம்

உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் வாங்க மாஸ்கோ நகரில் ஜித்நயா தெருவில் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் கால்பந்து ரசிகர்கள் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். அங்கே டிக்கெட் வாங்க கவுண்ட்டருக்கு செல்லும் முன்பு இந்த செர்பியாக்காரர் மிக்கி பேசுகையில் "இது உலகக்கோப்பை போட்டி, கூட்டம் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. நான் நீண்ட வரிசையில் நிற்பதைப் பற்றி கவலைப்படுவதிலை."

 பெரு கேப்டனுக்காக வந்த ரசிகர்கள்

பெரு கேப்டனுக்காக வந்த ரசிகர்கள்

டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் நின்றிருந்தவர்களில் லத்தின் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்களும் சிலர் இருந்தனர். குறிப்பாக அதில் ஒருவர் பெருவில் இருந்து வந்திருந்தார். அவர் தன்னுடைய நாட்டு அணியின் கேப்டன் பாலோ குரேரோ விளையாடும் முதல் உலகக்கோப்பை போட்டியும் அனேகமாக அவருக்கு கடைசி உலகக்கோப்பை போட்டியுமான இந்த உலகக்கோப்பை போட்டியைக் காண மிகவும் ஆர்வமாக இருந்தார்.

 1000 டாலருக்கு டிக்கெட் கட்டணம்

1000 டாலருக்கு டிக்கெட் கட்டணம்

பிரேசிலில் நடந்த உலகக் கோப்பை போட்டியின்போது சர்வதேச கால்பந்து சம்மேளனம் நிர்ணயித்த விலையை விட 10 மடங்கு அதிகமாக பலர் டிக்கெட்டை பிள்ளாக்கில் விற்றனர். அத்துடன் ஒப்பிடும்போது மாஸ்கோவில் கட்டணம் சற்று குறைவுதான். இருப்பினும் 1000 டாலர் வரைக்கு டிக்கெட் விற்கப்பட்டதைக் காண முடிகிறது. மிக்கி ஸ்டானிஸ்லாவ் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.

போட்டி நடக்கும் அரங்கில் 25,000 பேர் மட்டுமே அமர்ந்து பார்க்க முடியும். ஆனால், பலரும் தடுப்புகளைத் தாண்டி குதித்து சென்றார்கள். அங்கே என்னதான் பாதுகாப்பு வீரர்கள் இருந்தாலும் அவ்வளவு பெரிய கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை.

Story first published: Friday, June 15, 2018, 13:14 [IST]
Other articles published on Jun 15, 2018
English summary
A Serbian Football fan Micky Stanislav, who is 60 year old, travelled to Moscow to watch FIFA world cup 2018 matches.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X