
இன்று கோவா, சென்னை
இன்று நடக்கும் ஐஎஸ்எல் லீக் போட்டியில் கோவா அணியை வீழ்த்தினால் அல்லது டிரா செய்தால் தான் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதல் புள்ளியை பெற முடியும். கோவா அணி தன் முதல் போட்டியை டிரா செய்து 1 புள்ளியோடு இருக்கிறது.

பின்தங்கிய சென்னை
முதல் போட்டியில் பெங்களூரு அணியை ஒரு கோல் அடிக்க விட்ட சென்னை அணி, ஒரு கோல் கூட அடிக்காததால், சென்னை அணியின் கோல் வித்தியாசம் "-1" என இருக்கிறது. இதனால், இன்று சென்னை அதிக கோல்கள் அடித்து வெற்றி பெறுவதும் முக்கியம்.

ஒரு தோல்வி தான்
சென்னையின் எஃப்சி அணியின் பயிற்சியாளர் ஜான் க்ரிகோரி கூறுகையில், "பெங்களூரு அணியுடனான போட்டிக்கு பின்பு நாங்கள் எங்கள் செயல்பாடுகளை அலசிப் பார்த்தோம். அவர்களை விட நாங்கள் 100 பாஸ்கள் அதிகம் செய்து இருக்கிறோம். அது வெறும் ஒரு போட்டி தான். எனவே, இப்போதே அதிர்ந்து போய்விட வேண்டியதில்லை" என நம்பிக்கையாக கூறினார்.
|
வேட்டி கட்டிய க்ரிகோரி
சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் க்ரிகோரி, சென்ற சீசனில் சென்னை அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற பின், கோப்பையோடு போஸ் கொடுத்தார். அதில் வேட்டி சட்டை போட்டு அவர் கொடுத்த போஸ் இந்தியா, மட்டுமல்லாது, அவரது சொந்த நாடான இங்கிலாந்திலும் பிரபலமானது. மீண்டும் அவரை வேட்டி அணிந்து பார்க்க வேண்டுமென்றால் சென்னை இந்த முறையும் கோப்பை வெல்ல வேண்டும்.