டாப் 4இல் இடம் பெறுமா கோவா? ஹைதராபாத் அணிக்கு எதிரான பரபர போட்டி!

ஹைதராபாத் : ஹைதராபாத்தில் உள்ள ஜிஎம்சி பாலயோகி அதெலட்டிக் மைதானத்தில் ஹைதராபாத் அணிக்கும் கோவா அணிக்கும் இடையே நடைபெறும் போட்டியில் கோவா அணி வெற்றியை உறுதி செய்யுமா ?

முந்தைய இரண்டு போட்டிகளில் ஒரு புள்ளியை மட்டுமே எடுத்த பிறகு, செர்ஜியோ லோபெராவின் அணி, அட்டவணையின் கீழே உள்ள அணிகளை ஜெயித்தால் மட்டுமே முதல் நான்கு இடங்களுக்குள் செல்ல வாய்ப்பு உள்ளது.

ஹைதராபாத் எஃப்சி அணி ஆறு ஆட்டங்களில் இருந்து வெறும் நான்கு புள்ளிகளுடன், உள்ளது. தற்போது ஒன்பது புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கும் கோவா அணி வெற்றி பெற்றால் மட்டுமே மற்ற அணிகளை தாண்டிச் செல்ல முடியும்.

ராபின் சிங்கின் தாமதமான டிரா நடப்பு சாம்பியனான பெங்களூரு எஃப்சிக்கு எதிராக ஒரு புள்ளியைத் தேர்வு செய்தது. இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் தனது சொந்த மண்ணில் இந்த நிலைக்கு வந்துவிட்டது.

எது எப்படி இருந்தாலும் எதிரணியின் தாக்குதல்களைத் தடுப்பது அல்லது தங்களை ஆக்கப்பூர்வமாக வைத்திருப்பது போன்றவற்றில் அவர்களின் மிட்ஃபீல்ட் சைடில் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பிரவுனுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், வரவிருக்கும் இந்த பிரச்சினைக்கு தனது அணியைத் தயார் செய்ய ஒன்பது நாட்கள் அவகாசம் உள்ளது.

ஸ்ட்ரைக்கர் கில்ஸ் பார்ன்ஸ் தனது உடற்திறனை மேம்படுத்தியுள்ளார், மேலும் மார்சலின்ஹோவுடன் இணைந்து ஒரு சிறந்த தொடக்கத்தை வழங்கலாம். ஆதில் கானுன் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சியில் சேர்ந்துள்ளார். இருப்பினும், டிஃபென்ஸ் வீரரான சாஹில் பன்வார் மற்றும் குர்தேஜ் சிங் ஆகியோர் இடைநீக்கம் காரணமாக விளையாட முடியவில்லை. பிரவுன் நிகில் பூஜாரியை இடது புறமாக ஆஷிஷ் ராயுடன் எதிர் பக்கமாக நிறுத்த முடியும் என்கிறார் பயிற்சியாளர்.

"உலகின் ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் காயங்கள் மற்றும் இடைநீக்க பிரச்சினைகள் இருக்கும். எங்களுக்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சிகிச்சை அறை இப்போது காலியாக உள்ளது. ஆனால் ஒரே நிலையில் இருந்து இரண்டு பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளோம். ஆனால், அந்த நிலையில் யார் விளையாடுகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் இந்த நேரத்தில் எங்களுக்கு நல்ல மனநிலை இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்" என்றார் பிரவுன்.

"நாங்கள் ஐ.எஸ்.எல்லில் ஆற்றல் மிகுந்த ஒரு குழுவாக உள்ளோம்.. குர்தேஜ் மற்றும் சாஹிலின் இடைநீக்கங்கள் இயல்பானவை - இவை கால்பந்தில் நடக்கின்றன. நான் இந்தியாவுக்கு வந்ததிலிருந்து இந்த போட்டிதான் மிகச் சிறந்தது" என்றார்.

ஸ்பெயினின் பயிற்சியாளர் இந்த சீசனில் விளையாட்டுக்காக முழுவதும் வெளிநாட்டு வீரர்களைக் கொண்டிருக்கவில்லை, ஹைதராபாத்திற்கு எதிரான இடை நீக்கம் செய்யப்பட்ட சென்டர்-பேக் மொர்தடா இல்லாததால் ஆட்டத்தில் ஒரு வீழ்ச்சி ஏற்படும். அதிர்ஷ்டவசமாக, மிட்பீல்டர் அஹ்மத் ஜஹோவும் தனது ஒரு போட்டித் தடைக்குப் பிறகு மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இது லோபரா மீது சிறிது அழுத்தத்தைக் குறைக்கும்.

எஃப்.சி கோவா தாமதமாக கோல்களை அடித்தது மற்றும் வெற்றி பெற வாய்ப்பிருந்தும் தோல்வி அடைந்தனர். முந்தைய இரண்டு ஆட்டங்களில் காணப்பட்டதைப் போல விளையாட்டுகளில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை என்பதில் அவர்களுக்கு வருத்தம் உண்டு.

"கடந்த மூன்று ஆண்டுகளில் இது மிகவும் கடினமான சீசனாகும். மற்ற அணிகள் பெரிய வீரர்களுடன் கையெழுத்திட்டுள்ளன. அனைத்து அணிகளும் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தவை. நாங்கள் நன்றாக இருக்கிறோம், ஆனால் இப்போது நிலைமை மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தது" என்று லோபரா கூறினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

English summary
ISL 2019-20 : Hyderabad FC vs FC Goa match 34 preview
Story first published: Sunday, December 8, 2019, 10:07 [IST]
Other articles published on Dec 8, 2019
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X