For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனை.. சாம்பியன் பெங்களூரு எஃப்சிக்கு இதுதான் சவால்!

பெங்களூரு: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் ஆறாவது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அனைவரின் மனதிலும் ஒரு கேள்வி எழுகிறது.

பெங்களூரு எஃப்சி அணி ஒரு புதிய சாதனையைப் படைத்து ஐஎஸ்எல் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளுமா? என்பது தான் அந்த கேள்வி

ISL 2019-20 : Will Last season Champion Bengaluru FC retain their title?

இதற்கு முன்பு வேறு எந்த அணியும் செய்யாததை அவர்களால் செய்ய முடியுமா? அப்படி ஒரு நற்பெயரை அவர்களால் பெற முடியுமா ? ஏன் முடியாது என்பது தான் பல நடுநிலையாளர்கள் கருத்து.

ஐ.எஸ்.எல் போட்டிகளில் பெங்களூரு எஃப்சி அணி இதுவரை குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஐ-லீக்கில் மூன்று ஆண்டுகள் கிடைத்த வெற்றிக்குப் பிறகுதான் பெங்களூரு எஃப்சி அணியினர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஐ.எஸ்.எல் போட்டிகளில் களமிறங்கி உடனடியாக தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

ஸ்பானிஷ் பயிற்சியாளர் ஆல்பர்ட் ரோகாவின் வழிகாட்டுதலால், பெங்களூரு எஃப்சி அணி முதல் சீசனில் மிக அற்புதமாக விளையாடினர். அந்த போட்டிகளில் எட்டு புள்ளிகள் முன்னிலை பெற்று முதலிடத்தில் இருந்தனர். ஆனால் இறுதிப்போட்டியில் தங்களது சொந்த மண்ணில் சென்னையின் எஃப்சி அணியிடம் தோற்றுப் போனதில் மனம் உடைந்தனர்.

அடுத்த சீசனில், பெங்களூரு அணி மீண்டும் திரும்பி வந்தது, ஆனால் இந்த முறை ரோகாவின் சிஷ்யரான கார்லஸ் குவாட்ரட்டின் தலைமையின் கீழ் கம்பீரமாக களமிறங்கியது பெங்களூரு அணி. இந்த சீசனில் பெங்களூரு அணி மிகச் சிறப்பாக விளையாடி அந்த லீக்கில் புயல் போல் தாக்கியது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகளில் பெங்களூரு அணி அபாரமாக ஆடி தொடர்ந்து முன்னிலை பெற்று இறுதிப் போட்டிக்கு வந்தனர், அந்தப் போட்டியில் எஃப்.சி. கோவா அணியை தோற்கடித்தனர்.

ISL 2019-20 : Will Last season Champion Bengaluru FC retain their title?

இந்த வெற்றியை அந்த அணி கொண்டாடி தீர்த்தது. அதே நேரத்தில் அடுத்த சீசனுக்கான பணிகளை பெங்களூரு செய்யத் தொடங்கியது. இதற்காக மீண்டும் திட்டமிட வேண்டிய நேரம் வந்ததையடுத்து வீரர்களை இணைப்பதற்கான புதிய கையொப்பங்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து வீரர்களையும் தக்கவைத்துக்கொள்வது போன்ற பணிகளில் அந்த அணி இந்த ஆண்டும் மீண்டும் கவனம் செலுத்துகிறது.

ரோஹித் அடித்த ரோஹித் அடித்த "சேவாக்" ஷாட்.. உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள்.. உடைந்து நொறுங்கிய சாதனைகள்!

இந்த சீசனில் பெங்களூரு அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. ஏனெனில், ஆஷிக் குருனியன், சுனில் சேத்ரி, உதாந்தா சிங் போன்ற திறமையாக வீரர்கள் பெங்களூரு அணிக்காக களம் இறங்குகின்றனர். இந்த கூட்டணி அகில இந்திய தாக்குதல் வரிசையுடன், தற்காப்பு சாம்பியன்கள் என மிகுந்த திறமைசாலிகளை கொண்டது

இந்த அணிக்காக கையெழுத்திட்டபோது பேசிய குருனியன், நாட்டின் ஒவ்வொரு இளம் கால்பந்து வீரரும் பெங்களூரு அணிக்காக விளையாட விரும்புகிறார்கள், இந்த கனவை நனவாக்க முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்தார்.

பெங்களூரு அணி எப்போதுமே சில வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்திருந்தாலும், உள்நாட்டு வீரர்களிடம் பெறும் கையொப்பங்களின் மூலம் வலுப்பெறுகிறது என்றே சொல்லலாம்.

இகோர் ஸ்டிமாகின் தொடக்க லெவன் போட்டியில் ஐந்து பெங்களூரு எஃப்சி அணி வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் முதல் இரண்டு உலகக் கோப்பை தகுதிப் போட்டிகளில் கேப்டன் சுனில் சேத்ரி, குர்பிரீத் சிங் சந்து, உதந்தா சிங், ராகுல் பெக்கே மற்றும் ஆஷிக் குருனியன் ஆகியோர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தனர்.

மிட்ஃபீல்ட் ஆட்டக்காரரான யூஜெனேசன் லிங்டோ இப்போது பெங்களூரு கிளப்புக்கு திரும்பியுள்ளார், நிஷ்குமார் போதுமான அளவு பொருத்தமாக இருந்திருந்தால், அவர் தேசிய அணியிலும் இடம் பெற்றிருப்பார். தற்போது ஒரு அணியில் இதுபோன்ற திகைப்பூட்டும் உள்நாட்டு வீரர்களை எங்கும் காண முடியாது என்றே சொல்லாம்.

கால்பந்து களத்தைப் பொருத்தவரை பெங்களூரு எஃப்சி அணியின் உறுதித்தன்மை அவர்களை மிகச் சிறந்த அணியாக உருவாக்கியுள்ளது. பெங்களூரு அணியினர் சிறந்த வீரர்கள் மூலம் தங்களது உயர் தரத்தை நிர்ணயித்துள்ளனர். அதே நேரத்தில் லீக்கில் மற்றவர்களுக்கு அவர்கள் கடுமையான போட்டியை கொடுப்பார்கள்.

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டிகளில் பெங்களூரு எஃப்சி அணியினர் இதற்கு முன்பு யாரும் செய்யாததைச் செய்வார்கள் என்று நடுநிலையாளர்கள் நம்புவதில் ஆச்சரியமில்லை

Photos Courtesy : ISL Media

Story first published: Saturday, October 19, 2019, 16:11 [IST]
Other articles published on Oct 19, 2019
English summary
ISL 2019-20 : Will Last season Champion Bengaluru FC retain their title?. This is the question asked by ISL fans.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X