For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

மெஸ்ஸி முதல் எம்பாப்பே வரை.. பீலே மறைவு.. அதிர்ச்சியில் உறைந்த கால்பந்தின் 4 பெரும் தலைகள்!

கால்பந்தின் கடவுள் என உலகம் முழுவதும் போற்றப்பட்ட பிரேசில் ஜாம்பவான் பீலே உயிரிழந்ததை அடுத்து பல்வேறு நாடுகளில் இருந்தும் இரங்கல் குவிந்த வண்ணம் உள்ளன.

கால்பந்து ஜாம்பவானான பீலே தனது 82 ஆவது வயதில் காலமானார். கால்பந்து வரலாற்றிலேயே 3 முறை உலக கோப்பையை வென்ற ஒரே வீரர் என்ற சாதனை இவரையே சேரும்.

யாரும் நினைத்து கூட பார்க்காத அசாத்திய சாதனைகளை பல ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்த்தி காட்டிய அந்த ஜாம்பவானுக்கு, தற்போதைய கால்பந்து சூப்பர் ஸ்டார்கள் தங்களது மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

கால்பந்து மன்னன் பீலே காலமானார்.. 3 முறை உலககோப்பை வென்ற ஒரே வீரர்.. ரசிகர்கள் கண்ணீர்கால்பந்து மன்னன் பீலே காலமானார்.. 3 முறை உலககோப்பை வென்ற ஒரே வீரர்.. ரசிகர்கள் கண்ணீர்

மெஸ்ஸி பதிவு

மெஸ்ஸி பதிவு

பீலே குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அர்ஜெண்டினாவின் முன்னணி வீரர் லியோனல் மெஸ்ஸி, மிகவும் சூருக்கமாக சொன்னாலும் பெரிய காரணங்களை உள்ளடக்கியுள்ளார். அதாவது எங்கள் நம்பிக்கை பீலேவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். தற்போதைய கால்பந்து நாயகனாக இருக்கும் மெஸ்ஸி ஓய்வு பெறும் வயதில் தான் தனது முதல் உலகக்கோப்பையை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரொனால்டோ உருக்கம்

ரொனால்டோ உருக்கம்

போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரேசில் மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் கால்பந்து அரசன் பீலேவுக்கு பிரியாவிடை கொடுக்கிறேன். உலகில் பல்வேறு வீரர்களுக்கு முன்னுதாரணமாக அன்று மட்டுமல்ல, இன்றும், எப்போதும் பீலேவின் பெயர் கொடி கட்டி பறக்கும். என்னிடம் அவர் காட்டிய அன்பை வார்த்தைகளில் கூற முடியாது. அவரின் நினைவுகள் என்றுமே இவ்வுலை விட்டு செல்லாது, சாந்தியுடன் செல்லுங்கள் அரசன் பீலே என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.

எம்பாப்பே பதிவு

எம்பாப்பே பதிவு

சமீத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த எம்பாப்பே மற்றும், பீலேவும் நெருங்கிய நட்பு கொண்டவர்கள். இதுகுறித்து பதிவிட்டுள்ள எம்பாப்பே, கால்பந்தின் அரசன் எங்களை விட்டு சென்றுவிட்டார். ஆனால் அவரின் பெருமைகளும், சாதனைகளும் எங்களை விட்டு என்றுமே செல்லாது, சென்று வாருங்கள் அரசரே என குறிப்பிட்டுள்ளார்.

நம்பர் 10 ஜெர்ஸி

நம்பர் 10 ஜெர்ஸி

பீலே குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ள பிரேசில் வீரர் நெய்மர், " பீலேவு வருவதற்கு முன்பு 10 என்பது வெறும் நம்பர் தான். ஆனால் அதற்கு அவர் உயிர் கொடுத்துள்ளார் என்ற வாசகத்தை எங்கோ பார்த்திருந்தேன். நான் கூறுவேன் பீலேவுக்கு முன்பு கால்பந்து வெறும் விளையாட்டு தான். ஆனால் அவர் வந்த பிறகு தான் அது ஒரு கலை என மாறியது. ஏழைகளுக்கு, கருப்பிணத்தவர்களுக்காக குரல் கொடுத்தவர் பீலே. குறிப்பாக பிரேசில் ஒரு நாட்டை உலகில் பிரபலப்படுத்தியவர். அவர் சென்றாலும் அவரின் மேஜிக் நீடித்து இருக்கும் எனக்குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, December 30, 2022, 10:39 [IST]
Other articles published on Dec 30, 2022
English summary
Messi to embappe.. football superstars reaction after pele's death news
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X