For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

கால்பந்து போட்டியால் கலவர பூமியான பெல்ஜியம்.. ஃபிஃபா உலகக்கோப்பையால் வந்த விணை.. அப்படி என்ன ஆனது??

கத்தார்: விளையாட்டு விணையாகும் என்று சொல்வது போல ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பெல்ஜியம் தோல்வியடைந்ததால் ஒரு நகரமே நாசமாகியுள்ளது.

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரின் குரூப் எஃப் பிரிவு ஆட்டத்தில், நேற்று பெல்ஜியம் மற்றும் மொராக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் பெல்ஜியம் அணியை 2- 0 என வீழ்த்தி மொராக்கோ ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

2018ம் ஆண்டு உலகக்கோப்பையில் 3வது இடமும், ஃபிஃபா தரவரிசையில் 2வது இடத்திலும் உள்ள பெல்ஜியம் அணியை மொராக்கோ வீழ்த்தியதும் சாதனையை படைத்தது.

ஃபிஃபா உலககோப்பை 2022 - ஈரான் கோல் கீப்பரின் மூக்கு உடைந்தது.. சொந்த அணி வீரரே தாக்கிய அதிர்ச்சிஃபிஃபா உலககோப்பை 2022 - ஈரான் கோல் கீப்பரின் மூக்கு உடைந்தது.. சொந்த அணி வீரரே தாக்கிய அதிர்ச்சி

எப்படி வென்றது?

எப்படி வென்றது?

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் நீண்ட நேரமாக இரு அணிகளுமே கோல் அடிக்காமல் சமநிலையுடன் இருந்தன. ஆனால் ஆட்டத்தின் 2வது பாதியில் மொராக்கோ அணி வீரர் ரோமெய்ன் சாஸ் 73வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன்பின் கூடுதல் நேரத்தில் மொராக்கோ வீரர் அக்ராஃப் மேலும் ஒரு கோலை அடித்து அசத்தினார்.

கலவரம் வெடிப்பு

கலவரம் வெடிப்பு

இந்நிலையில் இந்த தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத பெல்ஜியம் ரசிகர்கள் ஆத்திரத்தில் எல்லைமீறி சென்றுள்ளனர். பெல்ஜியம் தலைநகர் ப்ருசல்ஸில் சிலர் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள கார் மற்றும் பைக்குகளை சேதப்படுத்தியும், தீ வைத்து கொளுத்தியும், கடைகளை அடித்து நொறுக்கியும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

காய பாதிப்பு

காய பாதிப்பு

இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், போராட்டக்காரர்களை தடியடி நடத்தி விரட்டினர். இந்த கலவரத்தில் போலீசார்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சிலரும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருபுறம் அவர்களுக்கு தீவிர சிகிச்சை நடந்துக்கொண்டிருக்க, மற்றொரு புறம் இதுகுறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

வல்லுநர்களின் கோரிக்கை

வல்லுநர்களின் கோரிக்கை

இந்த முறை ஃபிஃபா உலகக்கோப்பையில் அசுர பலத்தில் இருந்த அணிகளை, யாருமே எதிர்பார்க்காத வகையில் கத்துக்குட்டி அணிகள் பந்தாடி வருகின்றன. இதனை ஒரு நல்ல விஷயமாக பார்க்க வேண்டுமே தவிர, அந்த சிறு அணிகள் மீது கோபத்தை காட்டக்கூடாது என கால்பந்து வல்லுநர்கள் அறிவுரைக்கூறியுள்ளனர்.

Story first published: Monday, November 28, 2022, 11:25 [IST]
Other articles published on Nov 28, 2022
English summary
Belgium foot ball team fans involved in Riots over Team's FIFA World Cup Loss To Morocco
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X