For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலாவது டெஸ்ட்: தோல்வியைத் தவிர்க்க போராடும் தென்னாப்பிரிக்கா! இன்று கிளைமாக்ஸ்

By Mathi

ஜோகன்னஸ்பெர்க்: இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தவிர்க்க தென்னாப்பிரிக்கா அணி போராடி வருகிறது. இன்றைய கடைசிநாள் ஆட்டத்தில் கிளைமாக்ஸ் தெரிந்துவிடும்.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரை இழந்தது. இதைத் தொடர்ந்து முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 280 ரன்களையும் பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா 244 ரன்களையும் எடுத்தன. இதனால் இந்திய அணி 36 ரன்கள் முன்னிலை வகித்தது.

458 ரன்கள் வெல்ல இலக்கு

458 ரன்கள் வெல்ல இலக்கு

தொடர்ந்து 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி அபாரமாக 421 ரன்களைக் குவித்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணி வெல்ல 458 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

நல்ல தொடக்கம்

நல்ல தொடக்கம்

பின்னர் தென்னாப்பிரிக்காவின் ஸ்மித், பீட்டர்சன் ஜோடி தொடக்கம் முதல் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடந்த 10 இன்னிங்சில் ஒரு முறை கூட 27 ரன்களை தாண்டாத பீட்டர்சன், உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

138/2

138/2

4வது நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில், தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சில், 2 விக்கெட்டு இழப்புக்கு 138 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று கடைசி நாள்..

இன்று கடைசி நாள்..

இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி எளிதான வெற்றி பெற வாய்ப்பிருக்கிறதுதான்.. ஆனால் 8 விக்கெட்டுகள் உள்ள நிலையில், போட்டியை தென்னாப்பிரிக்கா டிரா செய்யவும் வாய்ப்பிருக்கிறது.

Story first published: Sunday, December 22, 2013, 10:42 [IST]
Other articles published on Dec 22, 2013
English summary
South Africa trail by 320 runs, with eight wickets and one whole day remaining.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X