“நான் பார்த்து வியந்த சிறந்த செஸ் ஆட்டக்காரர்” பிரக்ஞானந்தாவை திடீரென அழைத்த முதல்வர்.. பாராட்டு மழை

சென்னை: உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை தோற்கடித்து அசத்திய பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு மழை பொழிந்துள்ளார்.

Recommended Video

Who Is Praggnanandhaa ? Chennai Boy Beats World Number 1 Chess Player

ஏர்திங்ஸ் மாஸ்டர் எனப்படும் பிரபல செஸ் தொடர் காணொலி காட்சி மூலமாக நடைபெற்று வருகிறது.

8 சுற்றுகளாக நடைபெறும் இந்த தொடரில் நேற்று உலகின் நம்.1 வீரரான கார்ல்சனுடன் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதினார்.

வீழ்த்தியது எப்படி

வீழ்த்தியது எப்படி

இதற்கு முன்னர் தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்திருந்த பிரக்ஞானந்தா, நம்பர் 1 வீரரையா தோற்கடித்துவிடப்போகிறார்? என விமர்சனங்கள் இருந்தன. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கார்ல்சனை வீழ்த்தி பதிலடி கொடுத்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அவர், 39 நகர்வுகளுடன் ஒட்டுமொத்த ஆட்டத்தையே முடித்துவிட்டார்.

பெரும் சாதனை

பெரும் சாதனை

மொத்தம் 16 பேர் பங்கேற்கும் இந்த தொடரில் பிரக்ஞானந்தா வெறும் 2 வெற்றிகளுடன் 12வது இடத்தை மட்டுமே பிடித்தார். எனினும் செஸ் உலகில் கொடிகட்டி பறப்பவரும், உலக சாம்பியனுமான கார்லசனை வீழ்த்தி பெரும் சாதனையை படைத்தார். இதற்காக பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

முதல்வரின் பாராட்டு

முதல்வரின் பாராட்டு

இந்நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த ட்வீட் போட்டுள்ள அவர், சூப்பர் கம்ப்யூட்டரையே தோற்கடித்த - தான் பார்த்து வியந்த உலகின் சிறந்த #Chess ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி, உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள் எனக்கூறியுள்ளார்.

சாதனைகள்

சாதனைகள்

சென்னையை சேர்ந்தவரான பிரக்ஞானந்தா, வெறும் 7 வயதில் FIDE மாஸ்டர் பட்டமும், எட்டு வாயதுக்குட்ப்பட்டோருக்கான (2013) மற்றும் 10 வயதுக்குட்பட்டோருக்கான (2015) உலக இளம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றவர். இதுமட்டுமல்லாமல் 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
CM Stalin Wishes to chess player Praggnanandha, after he beat world no.1 player carlsen
Story first published: Tuesday, February 22, 2022, 10:56 [IST]
Other articles published on Feb 22, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X