For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குத்தாட்டம் போட்ட வெளிநாட்டு வீரர்கள்.. கறுப்பு காய்களை எடுத்த மோடி..செஸ் ஒலிம்பியாட்டில் சுவாரஸ்யம்

சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது.

Recommended Video

குத்தாட்டம் போட்ட வெளிநாட்டு வீரர்கள்.. கறுப்பு காய்களை எடுத்த மோடி..

இதில் 185 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ் கலாச்சாரத்தை பறைச்சாற்றும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தமிழ்நாடு என்றாலே வெளிநாட்டுக்கு பரதநாட்டியம் தான் வெளிநாடுகளுக்கு காண்பிக்கப்படும்.

 செஸ் ஒலிம்பியாட் 2022.. தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்.. பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? செஸ் ஒலிம்பியாட் 2022.. தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்.. பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

குத்தாட்டம்

குத்தாட்டம்

ஆனால், இம்முறை முதல் முறையாக ஓயிலாட்டம், குயிலாட்டம், பறை இசை உள்ளிட்ட பல்வேறு நடன கலைஞர்கள் தொடக்க விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தினர். அப்போது தொடக்க நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களாக வந்த வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள், அந்த இசைக்கு குத்தாட்டம் போட்டனர்.

ரசிகர்களை கவர்ந்த நடனம்

ரசிகர்களை கவர்ந்த நடனம்

இதனால் உற்சாகமடைந்த கலைஞர்கள், வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு ஈடாக இசைத்து தங்களது திறமையை வெளிப்படுத்தினர். பொதுவாக செஸ் என்பது ஒரு போரிங் விளையாட்டு என்று கருதப்படும். ஆனால் இம்முறை போரிங் விளையாட்டையே தமிழ்நாடு மசாலா கலந்த ஆக்சன் விளையாட்டாக மாற்றியது.

பாலமாக இருக்கும்

பாலமாக இருக்கும்

பொதுவாக ஐபிஎல், உலககோப்பை கால்பந்து போட்டிகள் போன்ற தொடரை நடத்தினால், டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிடும். இதன் மூலம் போட்டியை நடத்தும் நாட்டுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். ஆனால் செஸ் போட்டி அப்படி அல்ல. இதன் மூலம் வருமானம் ஏதும் கிடைக்காது. ஆனால், செஸ் விளையாட்டு தற்போது தமிழக இளைஞர்களை மேலும் ஈர்க்க இது பாலமாக அமையும்.

கறுப்பு காய்கள்

கறுப்பு காய்கள்

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், மகளிர் பிரிவில் முதல் தரவரிசையில் இருக்கும் இந்தியாவுக்கு காய்கள் நிறத்தை தேர்ந்து எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தியாவுக்கு கறுப்பு நிறத்தை பிரதமர் மோடி தேர்ந்து எடுத்தார். இதே போன்று ஓபன் பிரிவிலும் அமெரிக்க அணிக்கு கறுப்பு காய்களை மோடி தேர்ந்து எடுத்தார்.

Story first published: Thursday, July 28, 2022, 22:14 [IST]
Other articles published on Jul 28, 2022
English summary
Dance by Foreign chess players and PM Modi chooses the colour of piece குத்தாட்டம் போட்ட வெளிநாட்டு வீரர்கள்.. கறுப்பு காய்களை எடுத்த மோடி..செஸ் ஒலிம்பியாட்டில் சுவாரஸ்யம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X