இது கொடூரமான குற்றம்.. அந்த கோச் மீது உடனே நடவடிக்கை எடுங்க.. விளையாட்டுத்துறை அமைச்சர் அதிரடி!

டெல்லி : பாலியல் சீண்டல் செய்த நீச்சல் பயிற்சியாளர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ட்விட்டரில் உத்தரவு போட்டுள்ளார் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ.

இந்த கொடூரமான குற்றம் செய்த நீச்சல் பயிற்சியாளர் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

கோவா மாநில நீச்சல் அணியின் தலைமை பயிற்சியாளர் சுரஜித் கங்குலி, மைனர் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியானது.

பெரிய அதிர்வலை

பெரிய அதிர்வலை

அதை வினோத் காப்ரி என்ற திரைப்பட இயக்குனர், விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூவின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார். சில புகைப்படங்களை இணைத்து இருந்தார் அவர். அது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

உடனடி நடவடிக்கை

உடனடி நடவடிக்கை

இந்த நிலையில் அமைச்சர் கிரண் ரிஜுஜூ உடனடியாக அதன் மீது நடவடிக்கை எடுத்து, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விளக்கத்தையும் ட்விட்டரில் தெரிவித்தார். முதலில் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் விளையாட்டுத் துறை ஆணையம் மூலம் நடவடிக்கை எடுத்தார்.

கொடூரமான குற்றம்

கொடூரமான குற்றம்

பின்னர், ட்விட்டரில் பதிவிட்ட அமைச்சர் கிரண் ரிஜுஜூ, இந்த கொடூரமான குற்றம் செய்த நீச்சல் பயிற்சியாளர் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

பணி கிடையாது

அதைத் தொடர்ந்து சுரஜித் கங்குலி என்ற அந்த கோவா நீச்சல் பயிற்சியாளரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகவும், இந்திய நீச்சல் கூட்டமைப்பு அவர் இந்தியாவில் வேறு எங்கும் பணி அமர்த்தப்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இது அனைத்து கூட்டமைப்புகளுக்கும் பொருந்தும் என்றும் கூறி உள்ளார்.

தொடர்பு கொள்ள முடியவில்லை

தொடர்பு கொள்ள முடியவில்லை

சம்பந்தப்பட்ட சுரஜித் கங்குலியை ஊடகங்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. அவர் தலைமறைவாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. விளையாட்டு ஆணைய நடவடிக்கையை அடுத்து காவல்துறை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Goa swimming coach scandal : Sports Minister Kiren Rijiju takes action over heinous crime
Story first published: Thursday, September 5, 2019, 15:03 [IST]
Other articles published on Sep 5, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X