முதல் நாளே சர்ச்சை.. யுத படுகொலை குறித்து கிண்டல்.. ஒலிம்பிக் 2020 துவக்க விழா இயக்குனர் சஸ்பெண்ட்!

டோக்கியோ: ஜப்பான் ஒலிம்பிக் 2020 துவக்க விழாவின் இயக்குனர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக் 2020 தொடரின் துவக்க விழா இன்று மாலை நடைபெற உள்ளது.ஒலிம்பிக் துவக்க விழா இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கும் இந்த துவக்க விழா நடக்க உள்ளது.

இன்று துவங்கி உள்ள ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 8ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த ஒலிம்பிக் தொடருக்கு இந்தியா முதல்முறையாக அதிக அளவில் 127 வீரர், வீராங்கனைகளை அனுப்பி உள்ளது. இந்தியா சார்பாக இந்த துவக்க விழாவில் 20 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள்.

ஒலிம்பிக் 2020.. துடுப்பு படகு போட்டியில் நெதர்லாந்த் சாதனை.. 9 வருட ரெக்கார்ட் முறியடிப்பு! ஒலிம்பிக் 2020.. துடுப்பு படகு போட்டியில் நெதர்லாந்த் சாதனை.. 9 வருட ரெக்கார்ட் முறியடிப்பு!

சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

இந்த நிலையில் ஒலிம்பிக் துவக்க விழாவின் இயக்குனரே தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஹிட்லரின் நாஜி படைகள் Holocaust விஷவாயு கூடத்தில் யூதர்களை கொன்றது குறித்து காமெடி செய்ததற்காக இவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இயக்குனர்

இயக்குனர்

ஒலிம்பிக் துவக்க விழாவின் இயக்குனரான கெண்டாரோ கோபயாஷி கடந்த 1998ல் யுத படுகொலை குறித்து தவறான காமெடி நாடகம் ஒன்றை நடத்தி இருந்தார். இந்த வீடியோ கடந்த சில நாட்களாக இணையத்தில் பெரிய அளவில் சர்ச்சையாகிக் கொண்டு இருந்தது. கொல்லப்பட்ட யூதர்களை கிண்டல் செய்யும் விதமாக இந்த நாடகம் முழுக்க காட்சிகள் அமைந்து இருந்தது.

நீக்கம்

நீக்கம்

இந்த வீடியோ இணையத்திலும், ஜப்பானியர்கள், உலகம் முழுக்க யூதர்கள் மத்தியிலும் கடும் எதிர்பலைகளை பெற்றது. இவர்தான் ஒலிம்பிக் துவக்க விழாவிற்கு இயக்குநரா என்று பலரும் விமர்சனம் செய்திருந்தனர். இதையடுத்து, இவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜப்பான் ஒலிம்பிக் தலைவர் சிக்கோ ஹாஷிமோட்டோ இது குறித்து அளித்த பேட்டியில், இயக்குனர் கெண்டாரோ கோபயாஷி செய்ததை ஏற்க முடியாது. அவரின் கருத்து தவறானது.

மன்னிப்பு

மன்னிப்பு

இந்த வீடியோ தற்போதுதான் எங்களின் கவனத்திற்கு வந்தது. இதனால் உடனடியாக அவரை பொறுப்பில் இருந்து நீக்கி இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து நீக்கப்பட்ட இயக்குனர் கெண்டாரோ கோபயாஷி அளித்த பேட்டியில், அந்த வீடியோவிற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். நான் எழுதிய வசனம் சில மிக மிக தவறானது. நான் செய்தது தவறுதான், என்று கெண்டாரோ கோபயாஷி தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Olympics 2020: The director of the opening ceremony fired over his not so funny Holocaust skit.
Story first published: Friday, July 23, 2021, 11:43 [IST]
Other articles published on Jul 23, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X