For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

‘உள்ளாடை குட்டையாக, எல்லாமே தெரிகிறது’.. அசிங்கப்டுத்தப்பட்ட மாற்றுத்திறனாளி ஒலிம்பிக் வீராங்கனை!

இங்கிலாந்து: மாற்றுத்திறனாளி ஒலிம்பிக் வீராங்கனை ஒருவர், தான் அணிந்திருந்த உள்ளாடை குறித்து அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது.

அடிச்சிருவாரு போல.. மைதானத்தில் கடும் சண்டை.. கோபித்துக்கொண்டு சென்ற இலங்கை கோச்.. அணிக்குள் சலசலப்பஅடிச்சிருவாரு போல.. மைதானத்தில் கடும் சண்டை.. கோபித்துக்கொண்டு சென்ற இலங்கை கோச்.. அணிக்குள் சலசலப்ப

இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் உலகின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் சூழலில் சர்ச்சை சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

அவமானப்படுத்திய அதிகாரி

அவமானப்படுத்திய அதிகாரி

பிரிட்டீஸின் வெல்ஷ் நாட்டைச் சேர்ந்தவர் தடகள வீராங்கனை ஆலிவியா பிரீன். பாரா ஒலிம்பிக் வீராங்கனையான சமீபத்தில் பெட்ஃபோர்டில் நடைபெற்ற இங்கிலிஷ் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டித் தொடரில் பங்கேற்றார். அப்போது தடகள வீரர்கள் வழக்கமாக அணியும் ஸ்ப்ரிண்ட் ப்ரீப்ஸ் எனப்படும் ஆடையயே அவர் அணிந்திருந்தார். ஆனால் அவரின் ஆடை மிகவும் குட்டையாக எல்லாம் தெரிவது போல் உள்ளது, இது சரியான முறையல்ல என்று போட்டியின் அதிகாரி ஒருவர் கிண்டலடித்துள்ளார். அதுவும் பெண் அதிகாரி ஒருவரே கிண்டலடித்துள்ளார்.

உருக்கமான ட்வீட்

உருக்கமான ட்வீட்

அனைவரின் முன் எழுந்த அந்த கருத்தினால், அவமானத்தில் தலைகுணிந்துபோன ஆலிவியா பிரீன் யாரிடமும் பேசாமல் தனது ஓய்வறைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் தற்போது அந்த சம்பவம் குறித்து உருக்கமான கருத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இங்கிலீஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் போது நான் வருத்தமடைந்தேன். நான் பல ஆண்டுகளாக இந்த பிரீஃப் உடையை தான் அணிகிறேன். இது இந்தப் போட்டிக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது. வரும் டோக்கியோ பாராலிம்பிக் போட்டியிலும் இதைதான் அணிவேன்.

பெண்களுக்கு மட்டும் தானா?

பெண்களுக்கு மட்டும் தானா?

இதுவே ஒரு ஆண் வீரர் இதே போன்று ஆடையை அணிந்தால் யாரேனும் இப்படி கிண்டல் செய்திருப்பார்களா?. மற்ற பெண் வீராங்கனைகளுக்கு இந்தப் பிரச்னை இல்லை என நினைக்கிறேன். எப்போதுமே பெண்கள் தான் தங்களின் ஆடை குறித்த விமர்சனங்களில் சிக்குகின்றனர். அவர்கள் எப்போது சிரமமாக உணரக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு.

வெற்றி மங்கை

வெற்றி மங்கை

ஆலிவியா பிரீன் கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக்கில் வெங்கலமும், 2015 மற்றும் 2017ம் ஆண்டு தங்கப்பதக்கமும் வென்றவர் ஆவார். பெருமூளை வாதத்தினால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவர் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் அடுத்ததாக டோக்கியோ பாராலிம்பிக்கிலும் கலந்துக்கொள்ளவுள்ளார்.

Story first published: Wednesday, July 21, 2021, 14:35 [IST]
Other articles published on Jul 21, 2021
English summary
Paralympian Olivia Breen says she left 'speechless' after being told Sprint shorts were inappropriate
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X