படுக்கைக்கு அழைத்த மாடலுக்கு ரூ.50 லட்சம்.. தீபிகா படுகோனேவுடன் காதல்.. ஜோகோவிச் மீதான 5 சர்ச்சைகள்!

சென்னை: கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் சிக்கியுள்ள உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்-ன் 5 முக்கிய சர்ச்சைகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன.

20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற செர்பியன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச், தற்போது ஆஸ்திரேலிய ஓப்பனில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் தான் தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்ட நிலையில் ஜோகோவிச் அதனை மீற முயன்றுள்ளார்.

சர்வதேச பிரச்சினையாக மாறிய ஜோகோவிச் விவகாரம்..! ஆஸி,செர்பியா இடையே மோதல்..ரணகளமான ஆஸி ஓபன் டென்னிஸ்சர்வதேச பிரச்சினையாக மாறிய ஜோகோவிச் விவகாரம்..! ஆஸி,செர்பியா இடையே மோதல்..ரணகளமான ஆஸி ஓபன் டென்னிஸ்

தடுப்பூசி சர்ச்சை

தடுப்பூசி சர்ச்சை

உடல் ரீதியாக பிரச்சினைகள் இருப்பதால், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள ஜோகோவிச், அதற்கான மருத்துவ அனுமதியுடன் ஆஸ்திரேலிய ஓப்பனில் கலந்துக்கொள்ள விசா பெற்றிருக்க வேண்டும். ஆனால் தவறான விசா பெற்றுவிட்டு, தன்னை உள்ளே அனுமதிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் ஜோகோவிச்சை, நடால் போன்ற வீரர்கள் சாடியுள்ளதால் புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்நிலையில் இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது ஜோகோவிச்சுக்கு முதல் முறையல்ல.

படுகோனேவுடன் காதல்

படுகோனேவுடன் காதல்

நோவாக் ஜோகோவிச், தனது சிறுவயது காதலியான ஜெலினாவையே கரம்பிடித்தார். கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்ட இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஜோகோவிச் தவறான உறவு வைத்திருந்ததால் கனவன் - மனைவி பிரியவுள்ளதாக தகவல் வெளியாகின. இந்திய நடிகை தீபிகா படுகோனே, பாப் செர்பியன் ஸ்டார் நடாஷா பெக்வாலாக் உள்ளிட்டோருடன் ஜோகோவிச் டேட்டிங் செய்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

முன்கோபம் பிரச்சினை

முன்கோபம் பிரச்சினை

ஜோகோவிச் பொதுவாக அதிக முன்கோபம் கொண்டவராக அறியப்படுகிறார். பல முறை அவர் டென்னிஸ் கோர்ட்டில் கோபத்தை வெளிப்படுத்த பேட்டை உடைத்துள்ளார். கடந்தாண்டு கோபத்தில் லைன் நடுவராக நின்றிருந்த பெண்மணியை பந்தால் தாக்கியதில் அவர் மூச்சுவிட திணறியது பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனால் ஜோகோவிச் அதிரடியாக தொடரில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். எனினும் அதன் பின்னரும் பல முறை தனது கோபத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 கழிவறை வியூகம்

கழிவறை வியூகம்

கழிவறையில் கூட ஜோகோவிச் குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. டென்னிஸ் கோர்ட்டில் போட்டி நடந்துக்கொண்டிருக்கும் போதே பல முறை கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு தனது கோபத்தை வெளிப்படுத்தி கழிவறையை உடைத்துவிடுவார் என்ற சர்ச்சை உள்ளது. ஆனால் அப்படி அவர் கழிவறைக்கு சென்றிவிட்டு விளையாட வந்ததில் 83.33 சதவீதம் வெற்றியை பெற்றுள்ளார் என்பது ஆச்சரியம் தரும் விஷயம்.

பாலியல் ரீதியான சர்ச்சை

பாலியல் ரீதியான சர்ச்சை

கடந்த 2021ம் ஆண்டு செர்பியன் மாடல் நடாலிஜா ஸ்கேகிக் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை படுக்கைக்கு வருமாறு செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என தனக்கு பணி கொடுக்கப்பட்டதாக கூறினார். மேலும் அதற்காக அந்த மாடலுக்கு ரூ.50 லட்சம் பணம் மற்றும் இலவச இன்ப சுற்றுலாவும் அனுப்பிவைக்கப்படுவதாக டீல் நடந்துள்ளது. எனினும் இதனை அவர் ஏற்காமல் பத்திரிகையில் புகார் கூறியுள்ளார். இது பெரும் பேசுப்பொருளானது.

இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம்

இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்துள்ள ஜோகோவிச் இந்த முறை மருத்துவ ரீதியாக சிக்கியுள்ளார். அவருக்கு பொதுவாக ஆங்கில மருத்துவத்தில் உடன்பாடு இல்லை என்ற பேச்சுக்கள் உள்ளன. ஸ்பானிஷ் பயிற்சியாளர் பீபீ -யுடன் சேர்ந்து இயற்கை மருத்துவத்தில் நாட்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே கொரோனா தடுப்பூசியையும் அதற்காக தான் போட மறுத்திருக்கலாம்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
5 Top controversies surrounding world class tennis player Novak Djokovic’s tennis career
Story first published: Friday, January 7, 2022, 12:30 [IST]
Other articles published on Jan 7, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X