For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எச்சூஸ்மி.. ராத்திரி விளையாடலாமா.. பெடரர் வைத்த "ரெக்வஸ்ட்"!

மெல்போர்ன்: மெல்போர்னில் கடும் வெயில் அடித்து வருவதால் ஜென் லென்னார்ட் ஸ்டிரப்புடனான போட்டியை இரவில் வைக்க முடியுமா என்று கேட்டிருந்தார். இருப்பினும் திட்டமிட்டபடி பகலிலேயே போட்டி நடந்தது. அதில் தனது ஸ்டைலில் அதிரடியாக வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார் பெடரர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்றுப் போட்டியில் பெடரரும், ஜெர்மனியின் ஸ்டிரப்பும் மோதினர். மெல்போர்ன் நகரில் தற்போது வெயில் காலம் என்பதால் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் போட்டியாளர்கள் சற்று அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதை வெளிப்படையாகவே பெடரர் கூறியுள்ளார். ஸ்டிரப்புடனான போட்டியை பகலுக்குப் பதில் இரவில் வைக்க முடியுமா என்று கூட தான் கோரிக்கை வைத்ததாகவும் பெடரர் கூறியுள்ளார். அந்த அளவுக்கு வெயிலில் தவித்தபடி ஆடி வருகின்றனர் வீரர்கள், வீராங்கனைகள்.

ஜோகோவிக் டென்ஷன்

ஜோகோவிக் டென்ஷன்

நோவாக் ஜோகோவிக்கும் கூட இந்த வெயில் குறித்து டென்ஷன் காட்டியுள்ளார். அவருக்கும், மான்பில்ஸுக்கும் இடையிலான போட்டியின்போது கிட்டத்தட்ட 40 டிகிரி செல்சியஸ் வெயில் வெளுத்தது. போட்டி முழுவதும் தான் மிகவும் அவதிப்பட்டு விட்டதாக கூறினார் ஜோகோவிக்.

10 டிகிரி கம்மிண்ணே

10 டிகிரி கம்மிண்ணே

ஆனால் பெடரர், ஸ்டிரப் இடையிலான போட்டியின்போது வெயில் சற்று தணிந்து 30 டிகிரி செல்சியஸாக இருந்தது. இதனால் சற்று பதட்டமின்றி ஆடினார் பெடரர். இப்போட்டியில் அவர் 6-4, 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் பெடரர் வெற்றி பெற்றார். முதல் இரு செட்களில் எளிமையாக வென்ற அவருக்கு, 3வது செட்டில் ஸ்டிரப் சற்று ஆட்டம் காட்டினார்.

ராத்திரிதான் பெஸ்ட்

ராத்திரிதான் பெஸ்ட்

போட்டிக்குப் பின்னர் பெடரர் கூறுகையில், இரவு நேரம்தான் இதுபோன்ற போட்டிகளுக்கு சரியாக இருக்கும். நான் கூட கோரிக்கை வைத்தேன், பகலில் வேண்டாமே என்று. இருந்தாலும் திட்டமிட்டபடியே விளையாடினேன். நான் மட்டுமல்ல பலரும் கூட இரவுப் போட்டிகளை விரும்புகிறார்கள்.

எல்லாத்துக்கும் ரெடிதான்

எல்லாத்துக்கும் ரெடிதான்

பகலிலேயேதான் ஆட வேண்டும் என்றாலும் அதை நான் நிராகரிக்க மாட்டேன். உயரத்துக்குப் போக வேண்டும் என்றால் எல்லா சூழலுக்கும் நாம் பக்குவப்பட வேண்டும். எனவே எந்த சூழலிலும் ஆடும் திறமையும், பக்குவமும் எனக்கு உள்ளது என்றார் பெடரர். 3வது சுற்றில் பெடரர், ரிச்சர்ட் கேஸ்கட்டை சந்திக்கிறார்.

Story first published: Friday, January 19, 2018, 9:53 [IST]
Other articles published on Jan 19, 2018
English summary
Roger Federer said he requested an evening match against Jan-Lennard Struff in the second round of the Australian Open but would not have minded playing in searing heat earlier on Thursday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X