For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என் வெற்றி இந்தியப் பெண்களுக்கு தூண்டுகோலாய் அமையும் - சானியா மிர்சா மகிழ்ச்சி

லண்டன்: எனது வெற்றி பல பெண்களை டென்னிஸ் விளையாட்டை நோக்கி கவர்ந்து இழுக்கும் என நம்புகிறேன் என்று விம்பிள்டன் பட்டம் வென்ற டென்னிஸ் உலகின் நட்சத்திர் வீராங்கனை சானியா மிர்சா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

விம்பிள்டன் மகளிர் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் கோப்பையை வென்றுள்ளார் இந்திய டென்னிஸ் உலகின் ஹீரோயின் வீரங்கனையான சானியா மிர்சா.

இதன் மூலமாக இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் கோப்பையை வென்ற இந்தியாவின் முதல் பெண் என்று வரலாறு படைத்ததுள்ளார் அவர்.

விம்பிள்டன் குறிக்கோள்:

விம்பிள்டன் குறிக்கோள்:

இந்த மாபெரும் சாதனை பற்றி சானியா கூறும் போது "டென்னிஸ் பேட்டை கையில் எடுக்கும் ஒவ்வொரு குழந்தையின் கனவும் விம்பிள்டன் பட்டம் வெல்வது தான். இங்கிலாந்தில் எனக்கு கிடைத்த ஆதரவு ஆச்சரியமாக இருந்தது.

உற்சாகப் படுத்திய ரசிகர்கள்:

உற்சாகப் படுத்திய ரசிகர்கள்:

மைதானத்தில் இருந்த ரசிகர்களிடம் நிலவிய உற்சாகத்தையும், அவர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டியதையும் பார்த்த போது இதற்காகதான் கடினமாக உழைக்கிறோம், விளையாடுகிறோம் என தோன்றியது.

போராடிக் கிடைத்த வெற்றி:

போராடிக் கிடைத்த வெற்றி:

நான் விளையாடிய டென்னிஸ் போட்டியிகளில் சிறந்த ஆட்டம் இதுவாகும். விம்பிள்டன் என்பதால் 3வது செட்டில் நாங்கள் 2-5 என்ற சுற்றில் பின்தங்கி இருந்தோம். அதில் இருந்து கடினமாக போராடி வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

பெண்களுக்கு ஊக்கம்:

பெண்களுக்கு ஊக்கம்:

கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவில் எனது இந்த வெற்றி பல பெண்களை டென்னிஸ் நோக்கி கவர்ந்து இழுக்கும் என நம்புகிறேன்" என கூறியுள்ளார்.

Story first published: Monday, July 13, 2015, 18:09 [IST]
Other articles published on Jul 13, 2015
English summary
On cloud nine after becoming the first Indian to clinch the Wimbledon women's doubles title, tennis star Sania Mirza is hoping that the triumph will inspire many more girls in the country to aim big in life.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X