ஆஸி, சட்டப்போராட்டத்தில் தோல்வி.. நேரடியாக துபாய்க்கு சென்ற டென்னிஸ் வீரர் ஜோகோவிச்.. அடுத்த ப்ளான்?

துபாய்: டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நேரடியாக தனது கவனத்தை துபாய் போட்டிக்கு திருப்பியுள்ளார்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் இன்று (17ம் தேதி) மெல்பர்ன் நகரில் தொடங்கவுள்ளது.

இந்த போட்டியில் கலந்துக்கொள்ள கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் கடந்த ஜனவரி 6ம் தேதி சென்ற ஜோகோவிச், ஆஸ்திரேலிய விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

என்ன பிரச்சினை

என்ன பிரச்சினை

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கே ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி என்பதால் அவரின் விசாவை ரத்து செய்து நாடு கடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவர் சட்ட ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். இதனையடுத்து அவர் தனது 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்வதில் எந்த பிரச்சினையும் இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக் 2வது முறையாக விசாவை ரத்து செய்தார்.

மீண்டும் தோல்வி

மீண்டும் தோல்வி

பொது நலன் கருதி, கடந்த வெள்ளிக்கிழமை ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்தும் ஜோகோவிச், ஃபெடரல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் இந்த முறை அவரால் வெற்றி பெற முடியவில்லை. இந்த வழக்கை நேற்று விசாரித்த 3 பேர் அடங்கிய நீபதிகள் அமர்வு, ஜோகோவிச்சின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

துபாய் சென்றடைந்தார்

துபாய் சென்றடைந்தார்

இந்நிலையில் அவர் நேற்று மாலை 5.21 மணி ( இந்திய நேரம்) அளவில் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார். சுமார் பதிமூன்றரை மணி நேரம் பயணத்திற்கு பின்னர் இன்று காலை ஜோகோவிச் துபாய்-க்கு சென்றடைந்தார். ஆனால் செர்பியாவுக்கு செல்லாமல், அவர் துபாய்க்கு சென்றது தான் புதிய சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

காரணம் என்ன

காரணம் என்ன

துபாய் ட்யூட்டி ஃபிரீ டென்னிஸ் தொடர் வரும் பிப்ரவரி 14ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த தொடரில் கடந்த 2020ம் ஆண்டு ஜோகோவிச் பட்டம் வென்றிருந்தார். எனவே இந்தாண்டும் அதில் பங்கேற்க தான் அவர் அங்கு சென்றுள்ளார் எனத்தெரிகிறது. துபாயை பொறுத்தவரையில் அயல்நாட்டில் இருந்து வருவோர் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. கொரோனா நெகட்டீவ் என்ற சான்றிதழ் மட்டும் இருந்தால் போது. எனவே அவர் அங்கு அடுத்த 20 நாட்கள் தங்கியிருந்து போட்டியில் பங்கேற்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Is Novak Djokovic To Play In The Dubai Duty Free tennis tournament?.. Arrives In Dubai After Deportation From Australia
Story first published: Monday, January 17, 2022, 11:19 [IST]
Other articles published on Jan 17, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X