For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

“இவ்ளோ சீக்கிரமா!!” படு உத்வேகத்துடன் மிரட்டும் பி.வி.சிந்து.. பிரெஞ்ச் ஓபனில் அரையிறுதிக்கு தகுதி!

அமீரகம்: பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார் இந்தியாவின் பி.வி.சிந்து.

உலக புகழ்பெற்ற பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து நேற்று முக்கியமான காலிறுதிப்போட்டியில் மோதினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தாய்லாந்தின் பூசனனை எதிர்கொண்டார். இந்தப் போட்டியின் முதல் நிமிடத்தில் இருந்தே சிந்துவின் கை ஓங்கியிருந்தது. ஆட்டத்தின் நடுவே தாய்லாந்து வீராங்கனை புள்ளிகளை குவித்த போதும், அதனை பி.வி.சிந்து நீண்ட நேரத்திற்கு விட்டுவைக்கவில்லை.

Indias PV Sindhu Storm into semifinals of French Open badminton

இதனால் முதல் சுற்றை 21 - 14 என்ற புள்ளிக்கணக்கில் அபாரமாக கைப்பற்றினார். 2வது செட்டிலாவது ஆட்டத்தில் இறுதி வரை பரபரப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சொல்லி வைத்தது போல மீண்டும் சிந்து ஆதிக்கம் செலுத்த 21 - 14 என 2வது செட்டையும் கைப்பற்றி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த காலிறுதிப்போட்டியில் சிந்து வெற்றி பெறுவதற்கு எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 38 நிமிடங்கள் மட்டுமே. இதன் மூலம் மற்றொரு சுவாரஸ்யமும் நிகழ்ந்துள்ளது. அதாவது சிந்துவும், தாய்லாந்து வீராங்கனை இதுவரை நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் 14 முறை சிந்து வெற்றி பெற்றுள்ளார். பூசனனை ஒரே ஒரு முறை மட்டுமே வெற்றி கண்டுள்ளார்.

ஒலிம்பிக்கில் தனது 2வது பதக்கத்தை வென்ற பி.வி.சிந்து, அதே உத்வேகத்துடன் அனைத்து போடிகளிலும் வெற்றி கண்டு வருகிறார். பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரையும் வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

இந்தியா டீம்ல இவங்க 3 பேர தூக்கிட்டு.. அவங்கள கொண்டு வாங்க.. இல்லைனா மூட்ட கட்ட வேண்டியது தான்இந்தியா டீம்ல இவங்க 3 பேர தூக்கிட்டு.. அவங்கள கொண்டு வாங்க.. இல்லைனா மூட்ட கட்ட வேண்டியது தான்

Story first published: Saturday, October 30, 2021, 21:27 [IST]
Other articles published on Oct 30, 2021
English summary
India's PV Sindhu Storm into semifinals of French Open badminton
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X