For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேண்டாம் வேண்டாம், வெண்கலம் வேண்டாம்: சொல்லி சொல்லி வெள்ளி வென்ற சிந்து

By Siva

ஹைதராபாத்: இனி வெண்கலப் பதக்கம் வேண்டாம் என்று தனக்கு தானே பல முறை கூறியதாக பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து தெரிவித்துள்ளார்.

ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஹைதராபாத்தை சேர்ந்த பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் பேட்மின்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.

No more bronze medals: Sindhu on Rio Olympic silver

இந்நிலையில் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிந்து கூறுகையில்,

நான் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வெல்லப் போவது இல்லை, வெண்கலம் வேண்டாம் என எனக்கு நானே பல முறை கூறிக் கொண்டேன். ஏற்கனவே நான் அடுத்தடுத்து வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளேன்.

நான் தைரியமானவள், யாராலும் என்னை வெல்ல முடியாது என எனக்கு நானே கூறி தன்னம்பிக்கையை வளர்த்தேன். இவ்வாறு கூறுமாறு என் பயிற்சியாளர் கோபிசந்த் தெரிவித்தார்.

உயரமாக இருப்பது ஒரு வகையில் நல்லது என்றாலும் குனிய கஷ்டமாக உள்ளது என்றார்.

Story first published: Tuesday, August 30, 2016, 16:33 [IST]
Other articles published on Aug 30, 2016
English summary
Silver medallist PV Sindhu said that she told herself no more bronze medals during Rio Olympics.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X