For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பேட்மிண்டன் லீக்: சாய்னா நேவால் ரூ.72 லட்சத்துக்கு ஏலம்

By Mayura Akilan

டெல்லி: இந்திய பேட்மிண்டன் லீக் போட்டியில் அதிரடி வீராங்கானை சாய்னா நேவாலை ரூ.72 லட்சத்துக்கு ஹைதராபாத் அணி ஏலம் எடுத்துள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளைப் போன்று இந்திய பேட்மிண்டன் லீக் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.6 கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் ஹைதராபாத் ஹாட்ஷாட்ஸ், பெங்கா பீட்ஸ் (பெங்களூர்), லக்னோ வாரியர்ஸ், மும்பை மாஸ்டர்ஸ், புனே பிஸ்டன்ஸ், டெல்லி ஸ்மாஷர்ஸ் ஆகிய 6 அணிகள் களம் இறங்குகின்றன.

ஐ.பி.எல். போன்றே பேட்மிண்டன் லீக் போட்டியிலும் வீரர், வீராங்கனைகள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்கள், ஒரு இந்திய ஜூனியர் வீரர் உள்பட 11 வீரர், வீராங்கனைகள் இடம் பெறுவார்கள்.

இதற்கான வீர்ரகளை தேர்வு செய்யும் ஏலம் டெல்லியில் நேற்று காலை தொடங்கியது. லண்டனை சேர்ந்த பைப் ஹைடோன் இந்த ஏலத்தை நடத்தியது. ஒவ்வொரு அணிகளும் வீரர்களை வாங்குவதற்கு அதிகபட்சமாக தலா ரூ.1½ கோடி வீதம் செலவு செய்ய அனுமதிக்கப்பட்டது.

மலேசிய வீரர்

மலேசிய வீரர்

மும்பை மாஸ்டர்ஸ் அணிக்கு மலேசிய வீரர் லீ சாங் ஒய் அதிகபட்சமாக 80 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

சாய்னா நேவால்

சாய்னா நேவால்

உலக தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள வீராங்கனை சாய்னா நேவால் ரூ.72 லட்சத்துக்கு ஏலம் போய் உள்ளார். அவரை ஹைதராபாத் ஹாட்ஷாட்ஸ் அணி வாங்கியுள்ளது.

பெங்களூர் அணி

பெங்களூர் அணி

இதேபோல், ஆடவர் பிரிவில் பெங்களூர் அணிக்கு கஷ்யப் 44 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

ஜுவாலா கட்டா

ஜுவாலா கட்டா

கவர்ச்சி புயல் ஜுவாலா கட்டா, பி.வி.சிந்து, அஸ்வினி பொன்னப்பா ஆகியோரும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரின் அடிப்படை விலை ரூ.29½ லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 14ல் தொடக்கம்

ஆகஸ்ட் 14ல் தொடக்கம்

இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் சார்பில் நடைபெறும் இந்த போட்டி ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை இந்தியாவில் 6 நகரங்களில் நடைபெறுகிறது.

சுனில் கவாஸ்கர், நாகர்ஜுனா

சுனில் கவாஸ்கர், நாகர்ஜுனா

இந்தியன் பேட்மிடன் லீக் போட்டிகளில் இடம் பெறும் அணிகளின் தலைவர்களாக விளையாட்டு வீரர்கள், நடிகர், தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர். நடிகர் நாகர்ஜுனா, முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், சகாரா குழுமம் முறையே ஒவ்வொரு அணியை வாங்கியுள்ளனர்.

Story first published: Tuesday, July 23, 2013, 10:15 [IST]
Other articles published on Jul 23, 2013
English summary
Badminton joined the big league in India on Monday when ace shuttler Saina Nehwal fetched $120,000, or Rs 72 lakh, at the players' auction of the IPL-styled Indian Badminton League that can potentially encourage many youngsters to take up the sport.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X