For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய டெஸ்ட் அணியின் 84 வருட வரலாற்றில் முதல் முறை.. சாதனைபடைத்த அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த்!

By Veera Kumar

மொகாலி: இந்திய டெஸ்ட் அணியின் 84 வருட கால வரலாற்றில் முதல் முறையாக மொகாலியில் நடைபெற்றுவரும் 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஒரு சாதனைபடைத்துள்ளனர்.

மொகாலி டெஸ்டில் டாசில் வென்று முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்த இங்கிலாந்து அணி, 283 ரன்களில் ஆல்-அவுட்டான நிலையில், இந்தியா தனது முதல் இன்னிங்சில் 417 ரன்களை குவித்து ஆல்-அவுட் ஆனது.

இந்திய இன்னிங்சில் மிடில் ஆர்டர் சொதப்பினாலும், டெய்ல்-என்டர்கள் எனப்படும் பவுலர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆல்ரவுண்டர் அஸ்வின்

ஆல்ரவுண்டர் அஸ்வின்

அஸ்வின் இப்போதெல்லாம் பவுலர் என்பதை தாண்டி ஆல்-ரவுண்டராக ஜொலிக்க தொடங்கியுள்ளார். இப்போட்டியிலும், அவர் தனது முத்திரையை பதித்து 72 ரன்கள் விளாசினார். இக்கட்டான நேரத்தில் 7வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய அவர் கோஹ்லியுடனும் பிறகு ஜடேஜாவுடனும் இணைந்து பார்ட்னர்ஷிப் கொடுத்தார்.

ஜடேஜா ஜஸ்ட் மிஸ்

ஜடேஜா ஜஸ்ட் மிஸ்

அதேபோல 8வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா, 90 ரன்கள் விளாசினார். 10 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டார் என்பதால், இது அரை சதம் கணக்கில் சேர்ந்தது. இந்த இன்னிங்சில் இந்தியாவின் அதிகபட்ச தனி நபர் ரன் இதுவாகும்.

அடுத்த ஆல்ரவுண்டர்

அடுத்த ஆல்ரவுண்டர்

அஸ்வினுக்கு பிறகு அணியின், 9வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய இளம் ஸ்பின்னர் ஜெயந்த் யாதவ், 55 ரன்கள் விளாசினார். இது சர்வதேச டெஸ்ட் அரங்கில் இவரது முதலாவது அரை சதமாகவும் இருந்தது. இந்த தொடரில்தான் முதல் முறையாக அவர் இந்திய அணிக்காக களம் காண்கிறார் என்பது இதில் சிறப்பு.

வரலாற்றில் முதல் முறை

வரலாற்றில் முதல் முறை

இந்திய டெஸ்ட் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே இன்னிங்சில் 7,8 மற்றும் 9வதாக களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் மூவர் அரை சதம் கடந்துள்ளது இதுதான் முதல் முறையாகும். சர்வதேச அளவில் இது 7வது நிகழ்வாகும். இதை, இங்கிலாந்து பவுலர்களின் திறமையின்மை என்று கூறுவதைவிட, இந்தியா அத்தகைய ஆல்-ரவுண்டர்களை இப்போது பெற்றுள்ளது என்பதுதான் கவனிக்க வேண்டிய அம்சம்.

அபார பேட்டிங்

அபார பேட்டிங்

பேட்ஸ்மேனாக இந்திய அணியில் அறிமுகமான ஜடேஜா போகப்போக பவுலர் லிஸ்டில் சேர்க்கப்பட்டார். ஆனால் பவுலராக களமிறங்கிய அஸ்வினோ, இப்போது பேட்ஸ்மேனாகவும் ஜொலிக்க ஆரம்பித்துள்ளார். இவ்விரு ஆல்ரவுண்டர்கள் நடுவே, ஜெயந்த் யாதவும் நல்ல ஆல்ரவுண்டராக காணப்படுகிறார். எனவேதான் இந்திய அணிக்கு இந்த சாதனை சாத்தியப்பட்டுள்ளது.

Story first published: Monday, November 28, 2016, 15:36 [IST]
Other articles published on Nov 28, 2016
English summary
India's spin trio of Ravichandran Ashwin, Ravindra Jadeja and Jayant Yadav, known for their bowling skills, today (November 28) set a new batting record on the 3rd day of the 3rd Test against England at IS Bindra Stadium.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X