For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.. பெயரை வெளியே சொல்லாத கிரிக்கெட் அமைப்பு

ஜோஹன்னஸ்பர்க் : இரண்டு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா அமைப்பு கூறி உள்ளது.

Recommended Video

Dhoni Retirementக்கு பிறகும் வரப்போகும் வருமானம் | Oneindia Tamil

தென்னாப்பிரிக்க ஆடவர் அணி வீரர்கள் கலாச்சார முகாமில் கலந்து கொள்ள உள்ளனர்.

அதற்கு முன்னதாக நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனையில் இருவருக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் உலகம் முடங்கி உள்ளது. இங்கிலாந்து அணி மட்டுமே தங்கள் நாட்டில் கிரிக்கெட் தொடர்களை நடத்தி வருகிறது. கரீபியன் பிரீமியர் லீக் தொடர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது.

மற்ற நாடுகள்

மற்ற நாடுகள்

மற்ற நாடுகள் எதிலும் கிரிக்கெட் போட்டிகள் நடக்கவில்லை. இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளனர். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இன்னும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடத் துவங்கவில்லை. தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கிரிக்கெட்டுக்கு வாய்ப்பில்லை

கிரிக்கெட்டுக்கு வாய்ப்பில்லை

கடுமையான லாக்டவுன் இருப்பதால் தென்னாப்பிரிக்காவில் அடுத்த சில மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகள் நடத்த வாய்ப்பில்லை. இதற்கிடையே தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் இன பாகுபாடு இருப்பதாக முன்னாள் வீரர்கள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கலாச்சார விழிப்புணர்வு

கலாச்சார விழிப்புணர்வு

"பிளாக் லைவ்ஸ் மேட்டர்" என்ற கருப்பினத்தவருக்கு ஆதரவான இயக்கம் கிரிக்கெட் வீரர்கள் இடையே பரவி வருகிறது. அதனால், வீரர்களுக்கு இன பாகுபாடு தொடர்பான கலாச்சார விழிப்புணர்வை ஏற்படுத்த கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரிசோதனை

கொரோனா வைரஸ் பரிசோதனை

ஆகஸ்ட் 18 முதல் 22 வரை நடைபெற உள்ள அந்த முகாமில் 32 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என அந்த முகாமில் பங்கேற்க இருந்த 50 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.

பாதிப்பு உறுதி

பாதிப்பு உறுதி

அதில் இரண்டு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. அவர்களின் பெயரை கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா வெளியிடவில்லை. அந்த இரண்டு வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறி உள்ளது.

Story first published: Thursday, August 20, 2020, 19:29 [IST]
Other articles published on Aug 20, 2020
English summary
2 South African players tested positive for Coronavirus. CSK did not disclosed their names. This tests was taken before the team’s culture camp to tackle the ongoing racial outbursts in South African cricket.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X