4 நாள் டெஸ்ட் போட்டி விவகாரம் - விராட்கோலி, ரவிசாஸ்திரிக்கு ஆதரவு தெரிவித்த பிசிசிஐ

மும்பை : ஐசிசி அறிவித்துள்ள 4 நாள் டெஸ்ட் போட்டி அறிவிப்புக்கு கேப்டன் விராட் கோலி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இவர்களுடன் இணைந்து இந்த விவகாரத்தில் ஐசிசிக்கு மறுப்பு தெரிவிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளுக்கு பார்வையாளர்கள் குறைந்து வருவதை காரணம்காட்டி பாரம்பரியமாக 5 நாட்கள் ஆடப்பட்டு வரும் டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைக்கும் முடிவை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இந்த முடிவுக்கு உலக அளவில் பல வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா, இங்கிலீஷ் மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு மற்றும் கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

கடைசி வாய்ப்பு.. இதைப் பண்ணா டீமுக்குள்ள வரலாம்.. தோனிக்கு செக் வைத்த பிசிசிஐ!

ஐசிசி அறிவிப்பு

ஐசிசி அறிவிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு பார்வையாளர்கள் வெகுவாக குறைந்துள்ள நிலையில் பாரம்பரியமாக விளையாடப்படும் 5 நாள் டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைக்கும் திட்டத்தை ஐசிசி அறிவித்துள்ளது.

கோலி, ரவிசாஸ்திரி கண்டனம்

கோலி, ரவிசாஸ்திரி கண்டனம்

ஐசிசியின் இந்த முடிவிற்கு கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், தென்னாப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளசிஸ் உள்ளிட்டவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

"டெஸ்ட் போட்டி அழிந்துவிடும்"

ஐசிசியின் இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்த கேப்டன் விராட் கோலி, ஐந்து நாள் போட்டி, 4 நாட்களாக மாற்றப்பட்டால், அடுத்தது 3 நாள் என குறைக்கப்பட்டு இறுதியில் டெஸ்ட் போட்டிகளே இல்லாத நிலை உருவாகும் என்று தெரிவித்திருந்தார்.

முட்டாள்தனமானது என கருத்து

முட்டாள்தனமானது என கருத்து

டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக மாற்றும் ஐசிசியின் இந்த திட்டம் முட்டாள்தனமானது என்று இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறிப்பிட்டிருந்தார்.

கோலி, சாஸ்திரிக்கு பிசிசிஐ ஆதரவு

கோலி, சாஸ்திரிக்கு பிசிசிஐ ஆதரவு

இந்நிலையில், ஐசிசியின் இந்த திட்டத்திற்கு சிவப்பு கொடி காட்ட பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக அதன் நிர்வாகி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு ஆதரவு தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிசிசிஐ திட்டம்

பிசிசிஐ திட்டம்

இந்த விவகாரத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா, கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலீஷ் மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு உள்ளிட்டவற்றுடன் வரும் 12ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள பிசிசிஐ அவார்ட் நிகழ்ச்சியின் இடையில் ஆலோசனை மேற்கொள்ள பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் அந்த நிர்வாகி குறிப்பிட்டுள்ளார்.

பிசிசிஐ அறிவிப்பு

பிசிசிஐ அறிவிப்பு

இரண்டு மிகப்பெரிய அணிகள் மோதும்போது இந்த திட்டம் பொருந்தாது என்றும் சிறிய அணிகளுக்கு வேண்டுமானால் இதை செயல்படுத்தி பார்க்கலாம் என்றும் அவர் கூறினார். பாரம்பரிய வடிவத்துடன் விளையாடக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
4 days test format : BCCI supports Virat Kohli & Ravi Shastri
Story first published: Friday, January 10, 2020, 18:11 [IST]
Other articles published on Jan 10, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X