For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4-வது ஒருநாள் போட்டி: 168 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை துவம்சம் செய்து அபார வெற்றி!

4-வது ஒருநாள் போட்டியில் 168 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை பந்தாடியது இந்தியா.

By Mathi

கொழும்பு: 4-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை 168 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் 2019 உலகக் கோப்பை போட்டியில் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது.

கொழும்பு பிரேமதாச மைதானத்தில் 4-வது ஒருநாள் போட்டி வியாழன்று நடைபெற்றது. முதலில் இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்தனர்.

6 ரன்கள் எடுத்த நிலையில் தொடக்க வீரர் தவான் அவுட் ஆக பேரதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் பின்னர் களமிறங்கிய கோஹ்லி- ரோகித் ஷர்மா ஜோடி அசத்தலாக விளையாடினர்.

அசத்திய கோஹ்லி- ரோகித்

அசத்திய கோஹ்லி- ரோகித்

கோஹ்லி 131 ரன்கள்; ரோகித் சர்மா 104 ரன்கள் குவித்தனர். இந்த ஜோடி இணைந்து 219 ரன்களை அள்ளியது. இதனைத் தொடர்ந்து களத்துக்கு வந்த பாண்ட்யா, ராகுல் நிலைத்து நிற்கவில்லை.

1 ரன்னில் அரைசதம் மிஸ்

1 ரன்னில் அரைசதம் மிஸ்

பின் டோணி 49 ரன்கள் எடுத்திருந்தார். 300-வது போட்டியில் 1 ரன்னில் டோணி அரை சதத்தை தவறிவிட்டார். மணீஷ் பாண்டே 50 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 375 ரன்களை குவித்தது.

376 ரன்கள் இலக்கு

376 ரன்கள் இலக்கு

376 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால் 42.4 ஓவர்களில் 207 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இலங்கை அணி பறிகொடுத்து பரிதாபமாக தோல்வியைத் தழுவியது. அந்த அணியில் மேத்யூஸ் அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்தார்.

நேரடி தகுதி இல்லை

நேரடி தகுதி இல்லை

இந்த பரிதாப தோல்வியின் மூலம் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேரடி தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது. ஏற்கனவே தொடர் தோல்விகளால் ஜெயசூர்யா தலைமையிலான இலங்கை தேர்வு குழு ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 31, 2017, 22:59 [IST]
Other articles published on Aug 31, 2017
English summary
Riding on brilliant tons from Virat Kohli and Rohit Sharma followed by a clinical bowling effort, India defeated Sri Lanka in the 4th ODI by a colossal 168 run margin here on Thursday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X