For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட்டிங்! ஆறுதல் வெற்றிக்காக போராட்டம்

By Veera Kumar

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதலில் டெஸ்ட் தொடரிலும், தற்போது ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், ஒருநாள் தொடரை இந்திய அணி அபாரமாக கைப்பற்றி, தான் ஒரு நடப்பு உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது.

5th ODI: India opt to bowl, Umesh Yadav included

முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், அதன்பிறகு நடந்த 3 போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்று இந்திய அணி அசத்தியது. ஐந்தாவது மட்டும் தொடரின் கடைசி போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் டோணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டு தவல் குல்கர்ணி நீக்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் ஆடிய பிற வீரர்கள் இப்போட்டியிலும் அணியில் தொடர்கின்றனர்.

இந்திய அணி விவரம்: ஷிகர் தவான், அஜிங்ய ரகானே, விராட் கோஹ்லி, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ்.

இங்கிலாந்து அணி விவரம்: அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், இயோன் மோர்கன், அலஸ்டர் குக், மொயின் அலி, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோகஸ், ஜேம்ஸ் டிரெட்வெல், ஸ்டீவ் ஃபின், ஜேம்ஸ் ஆண்டர்சன். இதில் டிரெட்வெல் மர்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் கடந்த போட்டியில் ஆடவில்லை. அவர்களுக்கு பதிலாக ஆடிய ஹேரி குர்னே மற்றும் கேரி பல்லான்ஸ் ஆகியோர் கடைசி போட்டியில் கழற்றி விடப்பட்டுள்ளனர்.

கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் தேட இங்கிலாந்தும், டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்க இந்தியாவும் வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும்.

Story first published: Friday, September 5, 2014, 17:19 [IST]
Other articles published on Sep 5, 2014
English summary
Indian captain MS Dhoni won the toss and opted to bowl in the fifth and final One Day International against England in Leeds on Friday. Team India made one change, giving paceman Umesh Yadav his first game of the series, in place of Dhawal Kulkarni. England made two changes with James Tredwell and Ben Stokes replacing Harry Gurney and Gary Ballance. India have already won the series with a 3-0 lead.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X