For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பை கிரிக்கெட்: மேட்ச் தொடங்கும் முன்பே எட்டே கால் லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன!

By Veera Kumar

அடிலெய்டு: உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடரில் இதுவரை 825,000 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறியுள்ளது. ஆட்டத்தின் தொடக்க நாளில் இலங்கை-நியூசிலாந்து இடையே நடைபெற உள்ள போட்டி, இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஆகியவற்றுக்கு டிக்கெட் எப்போதோ விற்று தீர்ந்து விட்டதாம்.

முதல் நாளில் இரு போட்டிகள்

முதல் நாளில் இரு போட்டிகள்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வரும் 14ம்தேதி தொடங்குகிறது. முதல் நாளில் இரு போட்டிகள் நடக்கின்றன. இலங்கை-நியூசிலாந்து அணிகள் சர்ச்பார்க் ஸ்டேடியத்திலும், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மெல்போர்னிலும் மோத உள்ளன.

அரங்கு நிரம்பிய காட்சி

அரங்கு நிரம்பிய காட்சி

இதில் நியூசிலாந்து-இலங்கை போட்டிக்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்பனையாகிவிட்டன. ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோத உள்ள மெல்போர்ன் மைதானத்தின் மொத்த இருக்கைகள் 90ஆயிரமாகும். அதில் சில டிக்கெட்டுகள் மட்டுமே இன்னும் விற்பனையாகவில்லை.

இந்தியா-பாகிஸ்தான்

இந்தியா-பாகிஸ்தான்

15ம்தேதி ஞாயிற்றுக்கிழமை, தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகள் ஹாமில்டனில் பலப்பரிட்சை நடத்த உள்ளன. 10 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மைதானத்தில், 7 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. அன்றைய தினம் நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான முழு டிக்கெட்டும் விற்பனையாகிவிட்டது.

எட்டேகால் லட்சம் டிக்கெட்டுகள்.. அடேங்கப்பா..

எட்டேகால் லட்சம் டிக்கெட்டுகள்.. அடேங்கப்பா..

இதுவரை 825,000 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ள போதிலும், இன்னமும் பல போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை என்பதால், அதை ரசிகர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

Story first published: Wednesday, February 11, 2015, 12:12 [IST]
Other articles published on Feb 11, 2015
English summary
Tickets for the opening match of ICC World Cup 2015 between co-hosts New Zealand and Sri Lanka are already sold out. So far 825,000 tickets have been sold, International Cricket Council (ICC) announced today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X