பாக். கிரிக்கெட் வீரரால் வந்த வினை.. பப்ளிக்காக சோயப் மாலிக்கிடம் கோபித்துக்கொண்ட சானியா மிர்சா

Posted By:

லாகூர்: டிவிட்டர் என்பது வெறுப்புடன் சண்டை போட்டுக்கொள்வதற்கு மட்டுமல்ல, இதுபோல காதலை பரிமாறிக்கொள்ளவும்தான் என்பதை நிரூபித்துள்ளார்கள் விளையாட்டு துறை தம்பதிகளான சோயப் மாலிக் மற்றும் சானியா மிர்சா.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயப் மாலிக் மற்றும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இடையே காதல் மலர்ந்து திருமணம் நடைபெற்றது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இவர்கள் இருவருமே தங்கள் துறையில் இன்னும் பிஸியாக இருக்கும்போதும்கூட, காதலையும், பாசத்தையும் காட்டிக்கொள்ள மறந்ததில்லை. இப்படி ஒரு சம்பவம்தான் தற்போது அரங்கேறியுள்ளது.

தொடர் நாயகன்

தொடர் நாயகன்

இலங்கைக்கு எதிராக பாகிஸ்தானில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் அபாரமாக வென்றது. சோயப் மாலிக் இந்த வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். கடைசி போட்டியில் மேன் ஆப் தி மேட்ச் பெற்றதோடு, தொடர் நாயகனும் அவரேயாகும்.

வந்துகொண்டே இருக்கிறேன்

இதையடுத்து மாலிக்கிற்கு பரிசாக விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக் வழங்கப்பட்டது. இதை அறிந்த சானியா மிர்சா டிவிட்டர் பதிவு ஒன்றில், எனக்கும் பைக்கில் இடம் கிடைக்குமா என்று கேட்க, பதிலுக்கு மாலிக், உடனே ரெடியாகவும், நான் வருகிறேன் என கூறியிருந்தார்.

செல்லக் கோபம்

ஆனால், மைதானத்தில் சக வீரர் சதாப்கான், அந்த பைக்கின் பின் சீட்டில் அமர்ந்து கோப்பையை பிடித்துக்கொள்ள மாலிக் பைக்கை ஓட்டி வலம் வந்தார். இந்த போட்டோவை சோயிப் மாலிக் டிவிட்டரில் வெளியிட்டார். அதற்கு சானியா அளித்த பதில் "ஓ.. பரவாயில்லை.. அந்த சீட் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டது" என்று சலித்துக்கொள்வதை போல கூறியிருந்தார்.

மன்னிச்சிருங்க அண்ணி

தாங்குவாரா கணவர். உடனே மாலிக், அவரை மைதானத்திலேயே விட்டுவிட்டேன் என்று சொல்லி சமாதானப்படுத்தினார். மின்னலே திரைப்படத்தில் ஹீரோயினை பார்த்ததும், பைக்கிலிருந்து நண்பனை அத்துவிடும் மாதவன் கதாப்பாத்திரத்தை நினைவுபடுத்திவிட்டார் சோயப் மாலிக். இதனிடையே இந்த காட்சியின் 'வில்லன்' சதாப் கான், தனது டிவிட் ஒன்றில், 'ஊப்ஸ், சாரி அண்ணி' என குறிப்பிட்டு, சானியாவிடம் ஜாலியாக மன்னிப்பு கேட்டுள்ளார். இதை ரசிகர்கள் வெகுவாக ரசித்து ரீடிவிட் செய்து வருகிறார்கள்.

Story first published: Monday, October 30, 2017, 9:21 [IST]
Other articles published on Oct 30, 2017
Please Wait while comments are loading...