For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மீண்டும் ஒரு புது பிரச்சினை.. இந்தியாவின் அரையிறுதி வாய்ப்புக்கு சிக்கல்.. வங்கதேசம் தான் காரணம்!

அடிலெய்ட்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு செல்வதில் மேலும் ஒரு சிக்கல் உருவாகியுள்ளது.

முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணியை வீழ்த்தி அசத்திய இந்திய அணி, 3வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்துள்ளது.

முதலில் ஆடிய இந்திய அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 133 ரன்கள் குவிக்க, பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா 19.4 ஓவர்களிலேயே 5 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றி கண்டது.

இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு.. டி20 உலககோப்பையிலிருந்து விலகும் தினேஷ் கார்த்திக்.. ஏமாற்றம்இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு.. டி20 உலககோப்பையிலிருந்து விலகும் தினேஷ் கார்த்திக்.. ஏமாற்றம்

புள்ளிப்பட்டியல் விவரம்

புள்ளிப்பட்டியல் விவரம்

இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி 5 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துவிட்டது. இந்திய அணியோ 4 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 3வது இடத்தில் வங்கதேச அணியும் 4 புள்ளிகளுடன் இருக்கிறது. ரன்ரேட் குறைவாக இருக்கும் காரணத்தினால் மட்டுமே வங்கதேச அணி இந்தியாவுக்கு கீழ் உள்ளது.

அடுத்த 2 போட்டிகள்

அடுத்த 2 போட்டிகள்

இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் அடுத்து உள்ள 2 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்தவகையில் அடுத்ததாக வங்கதேசத்தை தான் எதிர்கொள்கிறது. இதில் 2வது இடம் யாருக்கு என முடிவு தெரிந்துவிடும். இப்போட்டி வரும் நவம்பர் 2ம் தேதியன்று, அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மீண்டும் ஒரு சிக்கல்

மீண்டும் ஒரு சிக்கல்

இந்நிலையில் இந்த போட்டியில் முடிவே எட்டப்படாமல் போகலாம் என தெரியவந்துள்ளது. அதாவது போட்டி நடைபெறும் அடிலெய்ட் நகரில் விடாது மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. நாளைய தினம் முழுவதும் மழைக்கான வாய்ப்பு இருக்கும் என்பதால் இந்தியாவின் பயிற்சியே ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படலாம்.

 மழை வாய்ப்பு

மழை வாய்ப்பு

போட்டி நடைபெறும் நாளன்றும் மாலை நேரத்தில் 95% சதவீதம் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்பதால் போட்டி ரத்தாக அதிக வாய்ப்புள்ளது. இப்படி நடந்தால் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு தலா ஒரு புள்ளி பிரித்து தரப்படும். அப்படி நடந்தால் மீண்டும் இரு அணிகளும் சமநிலைக்கு வந்து, மற்ற அணிகளின் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

Story first published: Monday, October 31, 2022, 12:58 [IST]
Other articles published on Oct 31, 2022
English summary
Rain may play spoilsport in India vs bangladesh match of t20 world cup 2022, here is the Adelaide weather report
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X