தேவைப்பட்டால் அதை செய்வேன்.. நியூசிலாந்து போட்டிக்கு துணை கேப்டன் ரஹானேவின் திட்டம்.. முழு விவரம்!

சவுத்தாம்டன்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்காக தனது திட்டம் என்னவென்பதை இந்திய அணி துணை கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்னும் 8 நாட்களில் தொடங்கவுள்ளது.

 பாரேன்.. தோற்றாலும் இந்தியா திரும்பி அடிக்கிறாங்க.. அந்த ஒரு பாரேன்.. தோற்றாலும் இந்தியா திரும்பி அடிக்கிறாங்க.. அந்த ஒரு

இதற்காக இரு அணி நிர்வாகமும் தங்களுக்கான திட்டங்களை வகுத்து வருகின்றனர். குறிப்பாக பேட்டிங் குறித்து வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

இந்திய அணி பயிற்சி

இந்திய அணி பயிற்சி

நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கிவிட்டனர். 3 நாட்கள் கடும் குவாரண்டைனில் இருந்த அவர்கள் தற்போது குழுவாக சேர்ந்த்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பந்துவீச்சாளர் உடற்தகுதி தேர்வும் விரைவில் நடைபெறும் எனக்கூறப்படுகிறது.

துணை கேப்டன் பதவி

துணை கேப்டன் பதவி

இந்த போட்டியுல் கோலியை விட துணை கேப்டன் ரஹானே என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் எழுந்துள்ளது. இதற்கு காரணம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம். விராட் கோலி, முகமது ஷமி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இல்லாத போதும் இந்திய அணிக்கு வரலாற்று வெற்றி பெற்றுக்கொடுத்தார் ரஹானே. இந்த தொடருக்கு பின்னர் ரஹானேவை முழு நேர கேப்டனாக நியமிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன.

ரஹானே

ரஹானே

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டி குறித்து பேசியுள்ள ரஹானே, கேப்டன் கோலி ஏற்கனவே நிறைய யோசனைகளை வைத்துள்ளார். எனவே நான் பின்னாடி அவருக்கு துணையாக நிற்க போகிறேன். ஒரு துணை கேப்டனாக எனது திட்டங்களை நான் தயாராக வைத்திருப்பேன். தேவை ஏற்பட்டால் மட்டுமே எனது திட்டத்தை கூறுவேன். அப்படி இல்லையென்றால் நான் எதுவும் தெரிவிக்க மாட்டேன் எனத்தெரிவித்துள்ளார்.

சிறந்த பார்ட்னர்ஷிப்

சிறந்த பார்ட்னர்ஷிப்

கேப்டன் கோலி மற்றும் புஜாரா ஆகியோருடன் பார்ட்னர்ஷிப் குறித்து பேசிய ரஹானே, நானும் விராட்டும் பார்ட்னர்ஷிப் அமைத்தால், அதிரடி ஆட்டத்தை தான் காட்ட விரும்புவோம். ஆனால் புஜாராவுடன் சேர்ந்து ஆடும் போது முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். புஜாராவுடன் சேர்ந்து பார்ட்னர்ஷி அமைத்து அதிரடி காட்ட வேண்டும் என்றால் சற்று நேரம் அதிகமாக எடுத்துக்கொள்ளும். ஆனால் விராட் மற்றும் நான் சேர்ந்தால் உடனடியாக முடிவெடுத்து அதிரடி காட்டுவோம் எனக்கூறியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
After the Australia Series, Vice Captain Ajinkya Rahane Reveals his Plan for WTC final against Newzealand
Story first published: Thursday, June 10, 2021, 15:46 [IST]
Other articles published on Jun 10, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X