For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிட்சா இது? ஸ்விங், வேகம் எதுவும் இல்லை, சுத்த வேஸ்ட்.. இங்கிலாந்து மானத்தை வாங்கும் இந்திய பவுலர்

Recommended Video

Bumrah | இங்கிலாந்து பிட்ச்சை விளாசிய பும்ரா

லண்டன்: இங்கிலாந்தில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கான பிட்ச்கள் ஸ்விங்கும், இல்லை வேகமும் இல்லை என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியுள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது, இங்கிலாந்தில் மொத்தம் 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடைபெறுகிறது. அங்கு ஆடுகளம் நன்கு உலர்ந்து பேட்டிங்குக்கு சொர்க்க புரியாக இருக்கும். அதே சமயம் மழை பெய்தாலோ அல்லது மேகமூட்டமான சீதோஷ்ண நிலை உருவானாலோ காற்றின் ஈரப்பதம் காரணமாக ஆடுகளத்தன்மை உடனடியாக மாறி விடும்.

All cricket pitches in england are worst says jasprit bumrah

பந்து நன்கு ஸ்விங் ஆகி, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும். இதற்கு ஏற்ப ஆடுவது தான் பேட்ஸ்மேன்களுக்கு உள்ள சவாலாகும். ஆனால், இவ்வாறு கூறியது போல, இங்கிலாந்து ஆடுகளம் ஸ்விங் ஆகும் என்று கூறுவது வெறும் மாயை என்று இந்திய பவுலர் ஜஸ்பிரித் பும்ரா கூறியிருக்கிறார்.

அவரு புதுசா வந்தா விஜய் ஷங்கர் இடத்தை தூக்கி கொடுப்பீங்களா? ரிஷப் பண்ட்டுக்கு எதிராக ஹர்பஜன் சிங்! அவரு புதுசா வந்தா விஜய் ஷங்கர் இடத்தை தூக்கி கொடுப்பீங்களா? ரிஷப் பண்ட்டுக்கு எதிராக ஹர்பஜன் சிங்!

அவர் மேலும் கூறியதாவது: நான் இதுவரை ஆடிய குறைந்த ஓவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுகளில் இங்கிலாந்து போல் வெறும் மட்டைப் பிட்ச்களை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. இந்த பிட்சுகள் பந்துவீச்சாளர்களுக்கு எந்த வகையிலும் உதவ வில்லை.

மட்டையான பிட்சுகள் என்ற விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டு ஆடுகிறோம். சவுதாம்ப்டனில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக முதல் போட்டியை ஆடிய போது புதிய பந்தில் வீசும் போது கொஞ்சம் பவுலிங்குக்கு உதவிகரமாக இருந்தது.

அது நல்ல பிட்ச். ஆனால் பந்து லேசாக பழசானாலும் பேட்டிங்குக்கு சாதகம் தான். ஓவல் மைதானம் பேட்டிங் பிட்ச், அங்கு 350 சராசரி ஸ்கோராக உள்ளது. ஆனால் அதை பற்றி எல்லாம் முன் கூட்டியே யோசிக்கக் கூடாது, ஆட்டம் நடைபெறும் தினத்தன்று பிட்சைப் பார்க்க வேண்டும்.

எந்த முறையில் பவுலிங் வீச வருகிறதோ, அப்படி ஆட வேண்டும். பிட்ச் ஸ்விங்க் ஆகிறதா, இல்லையா என்பதை பார்த்து அதற்கு ஏற்ப ஆட வேண்டும். தமது ஆட்டத்திறனை மாற்ற வேண்டும் என்றார்.

Story first published: Friday, June 21, 2019, 17:49 [IST]
Other articles published on Jun 21, 2019
English summary
All cricket pitches in england are worst says jasprit bumrah.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X