For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காலின் டி கிராண்ட் ஹோம் மறைவு?.. நியூசி, கிரிக்கெட் வாரியத்தின் அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: காலின் டிகிராண்ட் ஹோம் குறித்த நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு ரசிகர்களிடையே பூகம்பத்தை கிளப்பியுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக விளங்கி வருபவர் காலின் டி கிராண்ட் ஹோம்.

ஐபில்: கோலியின் ரெக்கார்டையே முறியடிக்கும் வீரர்.. நிச்சயம் 2 - 3 சதங்களை அடிப்பார்.. கம்பீர் உறுதி ஐபில்: கோலியின் ரெக்கார்டையே முறியடிக்கும் வீரர்.. நிச்சயம் 2 - 3 சதங்களை அடிப்பார்.. கம்பீர் உறுதி

சர்வதேச போட்டிகளில் கலக்கி வந்த இவர் கடந்த சில வருடங்களாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று இந்தியர்களுக்கு பரிட்சையமானார்.

நியூசிலாந்து வாரியத்தின் பதிவு

நியூசிலாந்து வாரியத்தின் பதிவு

அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும், தங்களது வீரர்கள் குறித்த அப்டேட்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வரும். அந்தவகையில் தான் இன்று நியூசிலாந்து அணியும் புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்தது. ஆனால் அந்த விளையாட்டான விஷயம் தற்போது வினையாக முடிந்துள்ளது.

முல்லட் பிரச்னை

முல்லட் பிரச்னை

தோனி எப்படி ஒரு காலக்கட்டத்தில் ஹேர் ஸ்டெயிலுக்கு பிரபலமாக விளங்கினாரோ, அதே போன்று காலின் டி கிராண்ட் ஹோமும் தனது நீண்ட முடிக்கொண்ட ஹேர்ஸ்டெயிலுக்கு பிரபலமானவர். அவரின் அந்த ஹேர்ஸ்டெயிலுக்கு ஆங்கிலத்தில் 'முல்லட்' ( Mullet) எனப்பெயர் உள்ளது. மிகவும் பிரபலமான அந்த ஹேர்ஸ்டெயிலை தற்போது கிராண்ட் ஹோம் மாற்றி அமைத்துள்ளார். அதாவது முடியை முழுவதுமாக குறைத்து, மொட்டை அடித்தது போன்று உள்ளார்.

பிரேக்கிங் பதிவு

பிரேக்கிங் பதிவு

இந்நிலையில் இவரின் தோற்றம் குறித்த தகவல் வெளியிட நினைத்துள்ளது நியூசிலாந்து வாரியம். அதன்படி கிராண்ட் ஹோமின் புகைப்படத்தை பதிவிட்டு, அதில் பிரேக்கிங் நியூஸ் என குறிப்பிட்டு, மிகவும் பிரபலமான காலின் டி கிராண்ட் ஹோமின் 'முல்லட்' மறைந்தது என சோகமாக இருக்கும் எமோஜியை பதிவிட்டுள்ளது. ( The famous Colin de Grandhomme mullet is no more 😔).

 ஆத்திரத்தில் ரசிகர்கள்

ஆத்திரத்தில் ரசிகர்கள்

இதனை பார்த்த ரசிகர்கள் முல்லட் என்ற வார்த்தையை கவனிக்காமல் டி கிராண்ட் ஹோம் மறைந்துவிட்டார் என நினைத்துக்கொண்டனர். மேலும் சமூக வலைதளங்களில் அவருக்காக இரங்கலை தெரிவிக்க தொடங்கிவிட்டனர். இவ்வளவு சிறு வயதில் உயிரிழந்துவிட்டார் என கவலை தெரிவித்து வருகின்றனர். மற்றொரு புறம் உண்மை தெரிந்த ரசிகர்கள் நியூசிலாந்து வாரியத்தை விட்டு விளாசி வருகின்றனர். நியூசிலாந்தின் இந்த செயலால் கிரண்ட் ஹோமும் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது.

Story first published: Thursday, September 16, 2021, 16:48 [IST]
Other articles published on Sep 16, 2021
English summary
All rounder Colin de Grandhomme No More? Fans are shocked after NZ Cricket's 'Breaking' Post
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X