நீலமும் மஞ்சளும் மோதும் போட்டி.. தொடரும் 10 வருட கிரிக்கெட் பகை.. சென்னை சிங்கமும் மும்பை டானும்!

Posted By:
சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் முதல் போட்டி நாளை நடக்கிறது

சென்னை: 10 வருடமாக ஐபிஎல் போட்டிகளில் முக்கியமான இரண்டு அணிகளாக பார்க்கப்படும் மும்பை அணியும், சென்னை அணியும் நாளை நேருக்கு நேர் களம் காண இருக்கிறது.

ஆஸ்திரேலியா இங்கிலாந்து, இந்தியா பாகிஸ்தான் இந்த அணிகள் நேருக்கு நேர் ஒரு ''பை- லேட்ரல்'' போட்டியில் விளையாடினால் அந்த போட்டி எந்த அளவிற்கு வைரல் ஆகும். அதே சுவாரசியம் கொண்டதுதான் மும்பை, சென்னை அணிகள் மோதும் ஐபிஎல் போட்டியும்.

சென்னை அணி தடை செய்யப்பட்ட போது சென்னை ரசிகர்களை அதிகம் கலாய்த்தது மும்பை ரசிகர்கள்தான். ஆனால் அதே மும்பை ரசிகர்கள்தான், ஐபிஎல்லில் போட்டிக்கு நல்ல கை குறைந்துவிட்டதே என்ற வருத்தத்திலும் இருந்தார்கள்.

பெரிய பகை

பெரிய பகை

கலாச்சார ரீதியாக இருக்கும் வேறுபாடு, முரண்பாடு ஐபிஎல் போட்டியிலும் தொடர்ந்து வருகிறது. 2008ல் நடந்த முதல் ஐபிஎல் போட்டியில் இருந்து சென்னை அணிக்கு பெரிய போட்டி எது என்று கேட்டால், நாளை பிறக்க போகும் குழந்தை கூட மும்பை அணிதான் என்று சொல்லும். அந்த அளவிற்கும் ரசிகர்கள் போட்டியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

ரோஹித் - டோணி

ரோஹித் - டோணி

உலகின் தலை சிறந்த கேப்டன்களில் டோணியும் ஒருவர். இந்திய அணிக்கு அவர் எல்லா விதமான கோப்பைகளையும் வாங்கி கொடுத்துவிட்டார். டி-20 உலகக்கோப்பை போட்டியிலும் கோப்பை வாங்கி கொடுத்து சாதித்துள்ளார். அதேபோல் ரோஹித் இதுவரை கேப்டனாக இருந்த ஒன்றிரண்டு டி-20 போட்டியில் மட்டுமே இந்தியா தோல்வி அடைந்து இருக்கிறது. கிரிக்கெட் விமர்சகர்கள் கூட ரோஹித்தான் சிறந்த டி-20 கேப்டன் என்று கூறி வருகிறார்கள்.

இரண்டுக்கும் மூன்றுக்கும் சண்டை

இரண்டுக்கும் மூன்றுக்கும் சண்டை

சென்னை அணி இதுவரை இரண்டு முறை ஐபிஎல் போட்டியில் கோப்பை வென்று இருக்கிறது. மும்பை அணி மூன்று முறை வென்றுள்ளது. சென்னை அணி இல்லாத காரணத்தால் மட்டுமே இது சாத்தியமானது என்று மும்பை அணியை இப்போதும் சென்னை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். இரண்டு அணியில் எந்த அணி சிறந்த அணி என்று நாளை நடக்கும் போட்டியில் தெரிந்துவிடும்.

மும்பை மீதான அழுத்தம்

மும்பை மீதான அழுத்தம்

மும்பை அணிக்கு இதில் நிறைய அழுத்தம் இருக்கிறது. பழைய வீரர்கள் பலரை அந்த அணி நீக்கி இருக்கிறது. கடைசி முறை கோப்பை வென்று இருப்பதால் இந்த முறையும் அந்த அழுத்தம் தொடர்கிறது. அதேபோல் சொந்த மண்ணில் நடக்கும் போட்டி என்பதால் மும்பை வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

2 வருட பசி

2 வருட பசி

மும்பை அணிக்கு வெற்றி பெறுவது ஆசையாக இருக்கலாம், ஆனால் சென்னை அணிக்கு வெற்றிபெற வேண்டிய பசி இருக்கிறது. அதற்காகவே சென்னை அணி இரண்டு வாரத்திற்கு முன்பே கிரிக்கெட் பயிற்சியை தொடங்கி உள்ளது. 2 வருடமாக விளையாடாத ஏக்கம் சென்னை அணிக்கும், ரசிகர்களுக்கும் இருக்கிறது. ஏன் டோணிக்கும் கூட அதிகம் இருக்கிறது.

அதிரும்

அதிரும்

நாளை 8 மணிக்கு நடக்கும் இந்த போட்டி இப்போதே டிவிட்டரில் டிரெண்டாகிக் கொண்டு இருக்கிறது. டோணி -ரோஹித், ரெய்னா- பாண்டியா, பும்ரா-பிராவோ, ஜடேஜா- குருனாள் பாண்டியா என்ற பெரிய சண்டையே இந்த போட்டியில் நடக்க உள்ளது. நீலமும், மஞ்சளும் மோதும் இந்த முதல் போட்டிதான் இனி நடக்க போகும் ஐபிஎல் களேபரங்களுக்கு தொடக்க புள்ளி!

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
All set for Mumbai vs Chennai IPL match in Wankhede Stadium. It is the most expected match in this IPL series.
Story first published: Friday, April 6, 2018, 16:24 [IST]
Other articles published on Apr 6, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற