For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பவுலிங்கில் கலக்கிய அர்ஜுன் டெண்டுல்கர்... எதிரணியை திணற அடித்தது எப்படி!

சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் அண்டர்-19 போட்டி ஒன்றில் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து எதிரணியை திணற அடித்து இருக்கிறார்.

By Shyamsundar

மும்பை: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் அண்டர்-19 போட்டி ஒன்றில் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து எதிரணியை திணற அடித்து இருக்கிறார். ஒரே போட்டியில் இவர் எடுத்த 5 விக்கெட்டுக்கள் காரணமாக எதிரணி மிக சொற்ப ரன்களில் சுருண்டு இருக்கிறது.

மும்பையில் அண்டர்-19 பிளேயர்கள் விளையாடும் 'பேஹர் கோப்பை' கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடும் பலர் ரஞ்சி போட்டிகளுக்கும், இந்திய அண்டர்-19 அணிக்கும் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்திய கிரிக்கெட் உலகில் இந்த தொடர் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது.

Arjun Tendulkar bowls takes 5 wicket in n under-19 match

இந்த தொடரில் கடந்த ஐந்து நாட்களாக மும்பை அணிக்கும் மத்திய பிரதேச அணிக்கும் இடையில் டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்ஸ் ஆடிய மத்திய பிரதேச அணி 361 ரன்கள் எடுத்து சுருண்டது.

அதன்பின் அதிரடியாக ஆடிய மும்பை அணி 506 எடுத்தது. மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட மத்திய பிரதேச அணி களம் இறங்கியது.

மத்திய பிரதேச வீரர்கள் அனைவரும் வரிசையாக அர்ஜுனின் பந்தில் அவுட் ஆகி வந்தனர். அர்ஜுனின் பந்தை தொட கூட முடியாமல் திணறி வந்தனர்.மிகவும் சிப்பாய் விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது இந்த சிறப்பான பந்துவீச்சு காரணமாக பலரது பாராட்டையும் பெற்றார்.

இவர் உலகின் முக்கிய பவுலர்கள் பலரிடம் பவுலிங் குறித்த அறிவுரைகளை கேட்டு விளையாடி வருகிறார். அதே போல சில நாட்களுக்கு முன் இவர் இந்திய அணியில் இருக்கும் முன்னணி வீரர்களுக்கு பவுலிங் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, November 23, 2017, 19:36 [IST]
Other articles published on Nov 23, 2017
English summary
Arjun Tendulkar, took a five wickets in the Behar Trophy Under-19 match between Mumbai and Madhya Pradesh.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X