தப்பு பண்ணிட்டீங்களே.. மறைக்க வேண்டியதை மறைக்காமல் வசமாக மாட்டிக் கொண்ட அஸ்வின்!

ashwin caught after used helmet with bcci

சென்னை : இந்திய அணியில் இடம் பெற்று வரும் தமிழக வீரர் அஸ்வின், விஜய் ஹசாரே இறுதிப் போட்டியில் தவறு செய்து வசமாக சிக்கி இருக்கிறார்.

வடிவேலு போக்கிரி படத்தில் "மண்டை மேலே இருக்கும் கொண்டையை மறந்துட்டோமே" என சிக்கிக் கொள்வது போலவே சிக்கிக் கொண்டுள்ளார் அஸ்வின்.

முதல் போட்டியிலேயே மரண அடி வாங்கிய ஹைதராபாத் அணி.. கோல் மழை பொழிந்து பந்தாடிய ஏடிகே!

ஹெல்மட் முத்திரை

ஹெல்மட் முத்திரை

தமிழக அணிக்காக ஆடிய அஸ்வின் ஹெல்மட் மேல் இருக்கும் பிசிசிஐ முத்திரையை மறைக்க மறந்து விட்டார். விதிப்படி அது தவறு என்பதால் சிக்கிக் கொண்டுள்ளார். அவரை தவிர அனைவரும் அந்த தவறை கவனித்தார்கள் என்பது வடிவேலு காமெடி போல இருந்தது.

விஜய் ஹசாரே இறுதி

விஜய் ஹசாரே இறுதி

உள்ளூர் ஒருநாள் போட்டிகள் தொடரான விஜய் ஹசாரே தொடரின் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதின. மழையால் பாதியில் தடைபட்டது இந்தப் போட்டி.

தமிழ்நாடு தோல்வி

தமிழ்நாடு தோல்வி

தமிழ்நாடு அணி முதலில் ஆடி 49.5 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்தது. கர்நாடகா அணி 1 விக்கெட் இழந்து 146 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. அதை அடுத்து விஜேடி முறைப்படி 60 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு தோல்வி அடைந்தது.

அஸ்வின் பேட்டிங்

அஸ்வின் பேட்டிங்

இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி பேட்டிங் செய்த போது மூன்றாவது இடத்தில் பேட்டிங் இறங்கி ஆச்சரியம் அளித்தார் அஸ்வின். அவர் எப்போதும் ஏழாவது அல்லது எட்டாவது இடத்தில் தான் பேட்டிங் இறங்குவார்.

விரைவாக அவுட் ஆனார்

விரைவாக அவுட் ஆனார்

எனினும், பேட்டிங் வரிசையில் பல பேட்ஸ்மேன்களுக்கு முன்பாகவே களம் இறங்கி 8 ரன்களில் விரைவாக ஆட்டமிழந்தார் அஸ்வின். அவர் பேட்டிங் செய்ய வந்த போது ஹெல்மட்டில் பிசிசிஐ முத்திரை இருந்தது.

முத்திரை

முத்திரை

சர்வதேச போட்டிகளிலும், பிசிசிஐ-க்காக நேரடியாக ஆடும் போட்டிகளிலும் தான் இந்திய வீரர்கள் பிசிசிஐ முத்திரையை தங்கள் உடை மற்றும் உபகரணங்களில் பயன்படுத்த முடியும் என்ற விதி உள்ளது.

பலரும் கவனித்தனர்

பலரும் கவனித்தனர்

தமிழ்நாடு அணிக்காக ஆடிய அஸ்வின் பிசிசிஐ முத்திரை அணிந்த ஹெல்மட் அணிந்து ஆடியது தவறு. அவர் ஹெல்மட் அணிந்து வந்த போது தொலைக்காட்சியில் பார்த்த பலரும் ஹெல்மட்டில் பிசிசிஐ முத்திரை இருப்பதை கவனித்தனர். ஆனால், அஸ்வின் மட்டுமே அதை கவனிக்கவில்லை.

போக்கிரி காமெடி

போக்கிரி காமெடி

போக்கிரி படத்தில் வரும் வடிவேலு காமெடி போல இருந்தது இந்த சம்பவம். அந்தப் படத்தில் வடிவேலு ஹீரோ விஜய்யை அவருக்கு தெரியாமல் பின்தொடர முயல்வார். அதற்காக மாறுவேடம் அணிந்து வருவார். ஆனால், விஜய்யின் ஆட்கள் அவரை கண்டுபிடித்து உதைத்து அனுப்புவார்கள்.

கொண்டையை மறந்துட்டோமே

கொண்டையை மறந்துட்டோமே

மாறுவேடம் போட்ட வடிவேலு, தலைக்கு மேலே இருக்கும் கொண்டையை மறைக்க மறந்து விடுவார். அது தான் மாட்டிக் கொள்ள காரணம், என தெரிந்து, "மண்டைக்கு மேலே இருக்குற கொண்டையை மறந்துட்டோமே" என ஃபீல் பண்ணுவார். அதே போல, ஹெல்மட் மேலே இருக்கும் முத்திரையை டேப் ஒட்டி மறைக்க மறந்து மாட்டிக் கொண்டார் அஸ்வின்.

அபராதம்

அபராதம்

விதிப்படி மேட்ச் ரெப்ரீ அஸ்வினுக்கு அபராதம் விதிக்க முடியும் என போட்டியை நடத்திய அதிகாரிகள் கூறினர். இதே போட்டியில் ஆடிய மற்ற இந்திய அணி வீரர்கள் மயங்க் அகர்வால் பிசிசிஐ முத்திரையை மறைத்து ஹெல்மட் அணிந்து ஆடினார். ராகுல் பிசிசிஐ முத்திரை இல்லாத சாதாரண ஹெல்மட் அணிந்து ஆடினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ashwin caught after used helmet with BCCI logo in Vijay Hazare Final. It resembles the Vadivelu comedy in the movie Pokkiri.
Story first published: Saturday, October 26, 2019, 12:38 [IST]
Other articles published on Oct 26, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X