For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பை அணிக்கான வீரர்கள்… இவங்க தான் செலக்ட் பண்ணுவாங்க.. அஸ்வின் சொன்ன தகவல்

சென்னை: உலக கோப்பைக்கான இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்று தேர்வுக் குழுதான் முடிவு செய்யும் என்று கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறினார்.

சென்னையை சேர்ந்த இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் அஸ்வின் மின்சாரம் அல்லாத புதுவித பந்துவீச்சு மெஷினை அறிமுகப்படுத்தினார். அதன் செயல்திறன் பற்றி பார்வையாளர்களுக்கு விளக்கமும் கொடுத்தார்.

இந்த நிகழ்ச்சி சென்னையில் விளையாட்டு அறிவியல் வளாகத்தில் நடைபெற்றது. அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

எங்களை கேலி செய்கிறீர்களா கோலி... ? வம்பிழுக்கும் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்எங்களை கேலி செய்கிறீர்களா கோலி... ? வம்பிழுக்கும் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்

பந்துவீச்சு பயிற்சி

பந்துவீச்சு பயிற்சி

இந்த புதிய இயந்திரத்தின் மூலம் மற்றவர்கள் துணையின்றி கிரிக்கெட் பயிற்சி பெற ஏதுவாக இருக்கும். ஒரு கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்கள் பயிற்சிக்கு பந்துவீச்சு மெஷின் ஒரு முக்கிய அம்சமாகும்.

 எளிதில் உபயோகிக்கலாம்

எளிதில் உபயோகிக்கலாம்

பல வகையாக பந்து வீசுவதால், ஒரு சிறந்த வீரரின் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடும் அனுபவத்தை கொடுக்கும். இந்த இயந்திரத்தை எளிதில் கையாளலாம். உலக கோப்பைக்கான இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்று தேர்வுக் குழுதான் முடிவு செய்யும்.

கால அவகாசம்

கால அவகாசம்

இந்தியாவில் அனுபவசாலிகள், இளம் வீரர்கள் என இரண்டு தரப்பிலும் திறமையானவர்கள் இருக்கிறார்கள். உலக கோப்பைக்கு இன்னும் அவகாசம் இருக்கிறது.

முக்கியத்துவம் வேண்டும்

முக்கியத்துவம் வேண்டும்

என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடுகிறேன். பொதுவாக கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.

சிறந்த ஆட்டம்

சிறந்த ஆட்டம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றுள்ள வருண் சக்கரவர்த்தி. டிஎன்பிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி உள்ளார். யாரை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது சூழ்நிலைக்கேற்றவாறு முடிவு செய்யப்படும். அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று அஸ்வின் தெரிவித்தார்.

Story first published: Saturday, March 9, 2019, 16:07 [IST]
Other articles published on Mar 9, 2019
English summary
Ashwin demonstrates non-electric cricket ball thrower in chennai.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X