இந்திய உலகக் கோப்பை அணியில் அஸ்வின் கிடையாது.. அதிர்ச்சி அளிக்கும் ரகசியம் சொன்ன நிர்வாகம்!

Posted By:
என்னது உலக கோப்பை இந்திய அணியில் அஸ்வின் இல்லையா ?

சென்னை: இந்திய உலகக் கோப்பை அணியில் அஸ்வின் இருப்பது சந்தேகம் என்று கூறப்பட்டு இருக்கிறது . அதேபோல் அணியில் ஜடேஜா இடம்பெறுவதும் சந்தேகம்தான்.

இதற்கு பிசிசிஐ நிர்வாகம் சூசகமாக பதில் அளித்து இருக்கிறது. இவர்கள் இடத்தை சாஹல், குல்தீவ் நிரப்புவார்கள் என்று கூறப்படுகிறது.

முக்கியமாக இதற்குப் பின் கோஹ்லி இருக்கிறார் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து இந்திய அணியின் விளக்கம் பதில் அளித்துள்ளார்.

ஸ்பின் இரட்டையர்கள்

ஸ்பின் இரட்டையர்கள்

தற்போது இந்திய ஒருநாள் அணிக்கு முக்கிய பவுலர்களாக சாஹல், குல்தீவ் இருக்கிறார்கள். இந்த ஸ்பின் இரட்டையர்கள் செய்த ரிஸ்ட் மாயாஜாலத்தைப் பார்த்து கிரிக்கெட் உலகமே அதிர்ந்து போய் இருக்கிறது. எனவே இவர் இந்திய ஒருநாள் அணியில் நீடித்து நிலைப்பார்கள் என்று கூறப்படுகிறது.

கோஹ்லி சப்போர்ட்

கோஹ்லி சப்போர்ட்

அதேபோல் இவர்களுக்கு கோஹ்லியின் சப்போர்ட் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக இவர்களை 2019ல் இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிக்கு இப்போதே தயார் ஆகச் சொல்லி இருக்கிறார். விரைவில் இவர்களை டெஸ்ட் அணியிலும் பார்க்க முடியும்.

டெஸ்ட் வீரர்கள்

டெஸ்ட் வீரர்கள்

இந்த நிலையில் அஸ்வினும், ஜடேஜாவும் டெஸ்ட் அணிக்கு மட்டுமான வீரர்கள் என்ற நிலை வந்துவிட்டது. இவர்கள் இனி ஒருநாளை அணிக்கே கிடையாது என்று பேசப்பட்டு வருகிறது. அதுவேதான் தற்போது இவர்களின் உலகக் கோப்பை இருப்பைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

விளக்கம்

விளக்கம்

இதுகுறித்து இந்திய அணியின் பவுலிங் கோச் பாரத் அருண் பதில் அளித்துள்ளார். அதில் ''இவர்கள் அணியில் இருப்பார்களா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் இவர்கள் அதற்கான ரேஸில் கண்டிப்பாக இருக்கிறார்கள். அதே சமயம் சாஹாலும், குல்தீப்பும் காயம் காரணமாக விலகினால் மட்டுமே இவர்கள் உள்ளே வர முடியும்'' என்று சூசகமாக சொல்லி இருக்கிறார்.

Story first published: Thursday, February 15, 2018, 16:08 [IST]
Other articles published on Feb 15, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற