மொத்தமாக பவுலிங் ஸ்டைலை மாற்றத் திட்டம்.. அஸ்வினின் அல்ட்ரா லெவல் பிளான்!

Posted By:
புது பவுலிங் ஸ்டைலுடன் களமிறங்க போகும் அஸ்வின்- வீடியோ

சென்னை: இந்திய வீரர் அஸ்வின் தனது பவுலிங் ஸ்டைலை மொத்தமாக மாற்ற இருக்கிறார். பல்வேறு யோசனைக்குப் பின் இந்த பவுலிங் ஸ்டைலை அவர் மாற்ற உள்ளார்.

இதற்காக அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 10 வருடமாக அவர் ஒரே ஸ்டைலில் பந்து வீசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் சிலர் மட்டுமே கிரிக்கெட் உலகில் பெரிய வீரராக மாறிய பின் பவுலிங் ஸ்டைலை மாற்றுவார்கள். தற்போது அதில் அஸ்வினும் இணைய உள்ளார்.

இல்லை

இல்லை

தற்போது அஸ்வினுக்கு மொத்தமாக ஒருநாள் அணியில் இருந்து முழுக்கு போடப்பட்டு இருக்கிறது. அவர் டெஸ்ட் அணிக்கான வீரர் என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரும் ஜடேஜாவும் சென்ற இடத்தை குல்தீப், சாஹல் நிரப்பி இருக்கிறார்கள்.

சரியில்லை

சரியில்லை

அஸ்வின் இதுவரை பந்தை விரல் மூலமாகச் சுற்றும் பின்கர் ஸ்பின் பவுலிங் போட்டு வந்தார். இது கடிகார முள் சுழலும் திசையில் பந்தை சுழற்றும். இதன் மூலம் பந்து வேகமாகச் சுழலும். முதலில் இதன் மூலம் விக்கெட் எடுத்த அஸ்வின் கடந்த ஆண்டு மோசமாகச் சொதப்பினார்.

லெக் ஸ்பின்

லெக் ஸ்பின்

இதனால் தற்போது இவர் லெக் ஸ்பின்னுக்கு மாற உள்ளார். லெக் ஸ்பின் எதிர் கடிகார முள் திசையில் ஸ்விங் ஆகும். இது வலது கை பந்து வீச்சாளர்கள் மூலம் எறியப்படும். விரல்கள் மூலம் இல்லாமல் மணிக்கட்டு மூலம் இது எறியப்படும். இதற்காக இவர் இப்போது பயிற்சி எடுத்து வருகிறார்.

ஐபிஎல் போட்டி

ஐபிஎல் போட்டி

தற்போது இவர் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காகத் தேர்வாகி உள்ளார். இந்த ஐபிஎல் போட்டியில் இவர் கண்டிப்பாக லெக் ஸ்பின் போடுவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் இடம்பிடிக்க அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Ashwin will bowl leg spin in IPL 2018. He changed his bowling style for Off break to Leg spin in order come back in one day Indian team.
Story first published: Friday, February 9, 2018, 13:54 [IST]
Other articles published on Feb 9, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற